நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!

டெல்லி : ஐசிசி தலைவர் பதவியை மூன்றாவது முறையாக தொடரப் போவதில்லை என்று சஷாங் மனோகர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி தலைவராக கடந்த 2016 முதல்முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்ற சஷாங் மனோகர், 2018ல் இரண்டாவது முறையாகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் இந்த பதவியை தொடர கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், ஐசிசியின் அடுத்த தலைவர் குறித்து மே மாதத்தில் தெரியவரும் என்றும் சஷாங் தெரிவித்துள்ளார்.

2016ல் ஒருமனதாக தேர்வு

2016ல் ஒருமனதாக தேர்வு

பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சஷாங் மனோகர், கடந்த 2016ல் ஐசிசியின் தலைவராக பன்னாட்டு நிர்வாகிகளால் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2வது முறையும் தேர்வு

2வது முறையும் தேர்வு

இந்நிலையில், பல்வேறு நாடுகளுக்கு டி20 அந்தஸ்து வழங்கியது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி போன்ற பல்வேறு சீர்திருத்தங்களுக்கு காரணமான சஷாங் மனோகர், இரண்டாவது முறையும் கடந்த ஆண்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"தலைவர் பதவியை தொடர விருப்பமில்லை"

இந்திய வழக்கறிஞரும் கிரிக்கெட் நிர்வாகியுமான சஷாங் பிசிசிஐயின் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய ஐசிசி தலைவர் பதவியை மூன்றாவது முறையாக நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

"பதவியை நீடிக்க விரும்பவில்லை"

ஐசிசி தலைவராக தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறவுள்ளநிலையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவியை நீடிக்க விரும்பவில்லை என்று மனோகர் கூறியுள்ளார்.

தெளிவாக உள்ளதாக கருத்து

தெளிவாக உள்ளதாக கருத்து

தன்னுடைய பதவியை தொடர ஐசிசியின் இயக்குநர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் ஆனால் தான் அதுபோல செய்யப் போவதில்லை என்பதில் தெளிவாக உள்ளதாகவும் மனோகர் தெரிவித்துள்ளார்.

"அடுத்த தலைவர் குறித்து மே மாதத்தில் தெரியும்"

ஐந்து ஆண்டுகளாக தான் ஐசிசி தலைவராக இருந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐசிசியின் அடுத்த தலைவர் குறித்து வரும் மே மாதத்தில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ICC Chairman Shashank Manohar is to step down when his term ends May 2020
Story first published: Tuesday, December 10, 2019, 17:01 [IST]
Other articles published on Dec 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X