“எல்லாம் பொய்யா கோபால்”.. இந்தியாவுக்கு எதிரான டி20.. நாடகமாடியதா பாகிஸ்தான்.. போட்டுக்கொடுத்த ஐசிசி

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மீண்டும் தனிப்பட்ட தொடர்களில் மோதிக்கொள்ளும் விவகாரத்தில் ஐசிசி கையை விரித்துள்ளது.

மீண்டும் Ind vs Pak தொடர் நடக்குமா? ICC-யிடம் PCB வைத்த கோரிக்கை

இரு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன.

விளையாட்டு மூலமாக ஒற்றுமை ஏற்படக்கூடாதா எனக்கூறி இரு அணிகளுக்கு இடையே ஆண்டிற்கு ஒரு முறையாவது போட்டி தொடர் நடத்த வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

ரிஷப் பண்ட் 'ஒன் மேன் ஷோ’..தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு நிர்ணயித்த இந்தியா.. வரலாறு படைக்குமா ரிஷப் பண்ட் 'ஒன் மேன் ஷோ’..தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு நிர்ணயித்த இந்தியா.. வரலாறு படைக்குமா

பாகிஸ்தானின் முன்னெடுப்பு

பாகிஸ்தானின் முன்னெடுப்பு

அந்த கோரிக்கைகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளதாக அறிவித்தது. அதாவது ஆண்டிற்கு ஒரு முறை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளுக்கு இடையே மட்டும் டி20 தொடர் ஒன்று நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.

தொடர் விவரங்கள்

தொடர் விவரங்கள்

இதுகுறித்து பேசியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஷ் ராஜா, 4 அணிகளும், ஒவ்வொரு ஆண்டில் இந்த தொடரை தொகுத்து வழங்கலாம் எனக்கூறியுள்ளார். மேலும் ஐசிசியிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார்.

ஆப்பு வைத்த ஐசிசி

 ஐசிசி ஆப்பு

ஐசிசி ஆப்பு

இந்நிலையில் அதற்கு ஆப்பு வைத்துள்ளது ஐசிசி அமைப்பு. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி தலைவர் கியாஃப் அலார்டைஸ், இந்தியா - பாகிஸ்தான் தொடர் குறித்து ரமிஷ் ராஜாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதுகுறித்து ஐசிசிக்கு ஒன்றுமே தெரியாது. தற்போதைக்கு நாங்கள் அது குறித்து எதுவுமே பேசுவது கிடையாது என்றும் கூறியுள்ளார். இதனால் ரமிஷ் ராஜா கூறியது உண்மையா? பொய்யா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐ சம்மதிக்குமா

பிசிசிஐ சம்மதிக்குமா

ஐசிசி ஏற்பாடுகளை செய்தாலும் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்குமா என்பது சந்தேகமே. ஏற்கனவே கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியவுடன் தனிப்பட்ட தொடர் நடைபெறுமா என்ற பேச்சுக்கள் அதிகமாகின. ஆனால் என்ன ஆனாலும் நடைபெறாது என பிசிசிஐ கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தானின் தற்போதைய கோரிக்கையை ஏற்குமா என்பதும் சந்தேகமே.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC Chief reveals that he had no communication with Ramiz Raja regarding four-team T20I series including India pakistan
Story first published: Friday, January 14, 2022, 13:20 [IST]
Other articles published on Jan 14, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X