For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிசயம் நிகழுமா?.. யாரும் செய்யாத அந்த சாதனை.. இந்த உலகக் கோப்பையில் நடக்கும்.. பரபர கணிப்பு!

இந்த வருடம் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிக முக்கியமான சாதனை ஒன்று நிகழ்த்தப்படும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

ICC WC 2019: யாரும் செய்யாத சாதனை இந்த உலக கோப்பையில் நிகழ்த்தப்படுமா?- வீடியோ

லண்டன்: இந்த வருடம் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிக முக்கியமான சாதனை ஒன்று நிகழ்த்தப்படும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இங்கிலாந்து வேல்ஸில் இந்த வருடம் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. மொத்தம் 10 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவை வலுவான நாடுகளாக பார்க்கப்படுகிறது. மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகியவை அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சதம் அடித்த சதம் அடித்த "திடீர்" நியூசி. வீரர்.. அவர் மட்டும் வராம இருந்தா டீமில் இடம் உறுதி!!

என்ன வரலாறு

என்ன வரலாறு

1996ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிக முக்கியமானது. அப்போது இலங்கை அணியில் உலகின் தரமான பேட்ஸ்மேன்கள் எல்லோரும் இருந்தனர். இதனால் அப்போது கென்யாவிற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டிற்கு 50 ஓவரில் இலங்கை 398 ரன்கள் எடுத்தது. அப்போதெல்லாம் 300 ரன்களை தாண்டுவது என்பதே ஆச்சர்யமான விஷயம்.

யார் அப்போது

யார் அப்போது

அந்த போட்டியில் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா 115 பந்தில் 145 ரன்கள் எடுத்தார். கென்யா அணி இந்த போட்டியில் மிக மோசமாக படுதோல்வி அடைந்தது. வெறும் 144 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.

அதன்பின்

அதன்பின்

அதன்பின் 2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 6 விக்கெட்டிற்கு 417 ரன்கள் எடுத்தது. அதேபோல் இந்தியா 5 விக்கெட்டிற்கு 2007 பெர்முடாவிற்கு எதிராக 413 ரன்கள் எடுத்தது. மேலும் 2011ல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா 5 விக்கெட்டிற்கு 418 ரன்கள் எடுத்தது.

நடக்குமா இப்போது

நடக்குமா இப்போது

இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாரும் 50 ரன்கள் எடுத்தது கிடையாது. பெரும்பாலும் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 500 ரன்கள் என்பது சாத்தியமே இல்லாத ஸ்கோர். குறைந்தது மூன்று இரண்டு பேட்ஸ்மேன்கள் செஞ்சுரி, மூன்று பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடிக்க வேண்டும். பவுலர்களும் மிக மோசமாக சொதப்ப வேண்டும்.

உலகக் கோப்பை முக்கியம்

உலகக் கோப்பை முக்கியம்

ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் 500 ரன்கள் அடிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆம் இங்கிலாந்து பிட்ச் தற்போது இருக்கும் நிலையை வைத்து கண்டிப்பாக இந்த உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் அடிப்பார்கள் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி அந்த சாதனையை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இங்கிலாந்து எப்படி

இங்கிலாந்து எப்படி

இங்கிலாந்து பிட்சில் கடைசியாக நடந்த பாகிஸ்தான் இங்கிலாந்து தொடரில் எல்லாம் 350+ ரன்கள் அடிக்கப்பட்டது. அதை இங்கிலாந்து சேஸ் செய்து தொடர் வெற்றியும் பெற்றது. இதனால் கண்டிப்பாக உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் அடிக்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அப்படி ஒரு அதிசய சாதனை நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Wednesday, May 29, 2019, 15:35 [IST]
Other articles published on May 29, 2019
English summary
ICC Cricket World Cup 2019: 500 run mark may be breached in this series says predictions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X