டி20 உலகக்கோப்பை தேதிகள்!!.. திடீரென ஐசிசி வெளியிட்டுள்ள அட்டகாச அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்!

துபாய்: 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மற்றும் தேதிகள் குறித்து ஐசிசி அறிவித்துள்ளது.

IPL 2022-ஐ எங்க நாட்டில் நடத்தலாம்.. BCCI-க்கு கோரிக்கை வைக்கும் Srilanka

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச்சென்றது.

இந்நிலையில் அடுத்த உலகக்கோப்பைகான அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே ரசிகர்களுக்கு திருவிழா காத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ரெடி!!.. ப்ளானை முடித்த பாகிஸ்தான்.. புதிய தொடர் உதயமாகிறதா? இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ரெடி!!.. ப்ளானை முடித்த பாகிஸ்தான்.. புதிய தொடர் உதயமாகிறதா?

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

அதன்படி 2022ம் ஆண்டுகான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் கோலகலமாக தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த முறை இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் நடத்தப்படவுள்ளன.

எந்தெந்த மைதானங்கள்

எந்தெந்த மைதானங்கள்

இதற்காக அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்பேர்ன், பெர்த், சிட்னி, ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்திலும், அரையிறுதி போட்டி சிட்னி, அடிலெய்ட், ஓவல் மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தகுதிச்சுற்று அணிகள்

தகுதிச்சுற்று அணிகள்

இந்த முறை ஆஃப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. நமிபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று வரவேண்டிய சூழலில் உள்ளன.

அட்டவணை அப்டேட்

அட்டவணை அப்டேட்

இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணைகளும் வரும் ஜனவரி 21ம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனைகள் வரும் பிப்ரவரி 6ம் தேதியன்றே தொடங்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC gives a important update over fixtures for T20 World Cup 2022, Schedule to be announce on january 21
Story first published: Friday, January 14, 2022, 17:03 [IST]
Other articles published on Jan 14, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X