For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனான விராட் கோலி.. மற்ற 5 இந்திய வீரர்கள் யார்?

துபாய் : ஐசிசி 2018ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கபட்டது. இந்திய அணியின் கோலி மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை புரிந்தார்.

விருதுகளோடு ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளில் ஐந்து இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இரு அணிகளுக்கும் கேப்டன் இந்தியாவின் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எந்தெந்த நாட்டு வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என பார்க்கலாம்.

2018இன் ஐசிசி ஒருநாள் போட்டிகள் அணி

2018இன் ஐசிசி ஒருநாள் போட்டிகள் அணி

2018இன் சிறந்த ஐசிசி ஒருநாள் போட்டிகள் அணி அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி 2018க்கான டெஸ்ட் அணியில் இந்திய வீரர்கள் மூவர் இடம் பிடித்துள்ளனர். இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் கோலி, பும்ரா இடம் பெற்றுள்ளனர். மொத்தம் ஐந்து இந்திய வீரர்கள் ஐசிசி அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் யார்?

இந்திய வீரர்கள் யார்?

ஐசிசி ஒருநாள் அணியில் துவக்க வீரராக ரோஹித் சர்மா, மூன்றாவது இடத்தில் களமிறங்க கோலி, பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி ஒருநாள் அணியில் இந்தியா, இங்கிலாந்து சார்பில் தலா நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டன் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் அணியின் மற்ற வீரர்கள்

ஒருநாள் அணியின் மற்ற வீரர்கள்

துவக்க வீரராக ஜானி பேர்ஸ்டோ, மிடில் ஆர்டரில் ஜோ ரூட், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜோஸ் பட்லர் மற்றும் ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து சார்பாக ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர வங்கதேச வீரர் முஸ்தாபிசூர் ரஹ்மான், ஆப்கன் வீரர் ரஷித் கான், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டிகள் அணி விவரம்

ஒருநாள் போட்டிகள் அணி விவரம்

ஐசிசி 2018 ஒருநாள் போட்டிகள் அணி - ரோஹித் சர்மா (இந்தியா), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), கோலி - கேப்டன் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து), ஜோஸ் பட்லர் - விக்கெட் கீப்பர் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), முஸ்தாபிசூர் ரஹ்மான் (வங்கதேசம்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ் (இந்தியா), பும்ரா (இந்தியா)

டெஸ்ட் அணியில் யார் யார்?

டெஸ்ட் அணியில் யார் யார்?

ஐசிசி டெஸ்ட் அணியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் தலா மூவரும், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளில் இருந்து தலா ஒரு வீரரும் தேர்வாகி உள்ளனர்.

டெஸ்ட் அணியில் இந்திய வீரர்கள்

டெஸ்ட் அணியில் இந்திய வீரர்கள்

இந்திய அணியில் கேப்டன் கோலி நான்காம் இடத்தில் பேட்டிங் ஆடவும், அதே சமயம் கேப்டனாகவும் இடம் பிடித்துள்ளார். இவர் தவிர விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் வேகப் பந்துவீச்சாளராக பும்ரா அணியில் இடம் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் அணி விவரம்

டெஸ்ட் அணி விவரம்

ஐசிசி 2018 டெஸ்ட் அணி - டாம் லாதம் (நியூசிலாந்து), டிமுத் கருணாரத்னே (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), கோலி - கேப்டன் (இந்தியா), ஹென்றி நிக்கோல்ஸ் (நியூசிலாந்து), ரிஷப் பண்ட் - விக்கெட் கீப்பர் (இந்தியா), ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), காகிஸ்கோ ரபாடா (தென்னாப்பிரிக்கா), நாதன் லியோன் (ஆஸ்திரேலியா), பும்ரா (இந்தியா), முஹம்மது அப்பாஸ் (பாகிஸ்தான்).

Story first published: Tuesday, January 22, 2019, 15:37 [IST]
Other articles published on Jan 22, 2019
English summary
ICC odi and test teams of the year 2018 - 5 Indian Players selected
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X