நம்பர் 1க்கு வந்த இந்தியா.. அசால்ட்டு சாதனைச் செய்த ஆப்கானிஸ்தான்.. என்ன பண்ணி இருக்காங்க தெரியுமா?

Posted By:
ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்த இந்தியா

சென்னை: ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தற்போது பல்வேறு அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடந்து வருவதால் இதில் பெரிய அளவில் மாற்றம் உருவாகி இருக்கிறது.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.

அதேபோல் ஆப்கானிஸ்தான் தரவரிசையில் புதிய இடம் பிடித்துள்ளது. இதற்குப் பின்பு அந்த அணியின் கடினமான உழைப்பும் இருக்கிறது.

எப்படி வந்தது

எப்படி வந்தது

இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் தான் இருந்தது. இப்போது 122 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அடுத்த போட்டியில் தோற்றாலும் இந்திய அணி இதே இடத்தில் தான் இருக்கும்.

படைக்கலாம்

படைக்கலாம்

அதேபோல் இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்து நடக்க இருக்கும் டி-20 தொடரை 3-0 என்று இந்தியா வென்றால் அதிலும் இந்தியா முதல் இடம் பிடிக்கும். இதன் மூலம் அனைத்து தரவரிசையிலும் இந்திய அணியை முதல் இடம் பிடிக்க வைத்த ஒரே கேப்டன் என்ற பெயரை கோஹ்லி பெறுவார்.

ஆப்கானிஸ்தான் சாதனை

ஆப்கானிஸ்தான் சாதனை

இதில் ஆப்கானிஸ்தான் அணியும் புதிய சாதனைப் படைத்து இருக்கிறது. அந்த அணி ஜிம்பாபேவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. தற்போது தோல்வியில் இருந்து மீண்டு இரண்டு போட்டியில் வென்று இருக்கிறது. இதனால் அந்த அணி ஐசிசி தரவரிசையில் 10வது இடம் பிடித்துள்ளது.

இன்னும் இருக்கிறது

இன்னும் இருக்கிறது

தற்போது ஜிம்பாபேவுக்கு இன்னும் கூட வாய்ப்பு இருக்கிறது. மீதம் இருக்கும் இரண்டும் போட்டியிலும் வெற்றி பெற்றால் அந்த அணி மீண்டும் 10வது இடத்திற்கு வரும். அதேபோல் ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டியில் ஒன்றில் தோற்றால் கூட மீண்டும் இடத்தை இழக்கும்.

Story first published: Wednesday, February 14, 2018, 16:49 [IST]
Other articles published on Feb 14, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற