For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த அதிரடிக்கு தயாரா ரசிகர்களே... மகளிர் டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

icc womens t20-wc schedule released

லண்டன்: மகளிர் உலகக் கோப்பை டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது பெண்கள் அணிக்காக முதல் முறையாக தனியாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

அனைத்து போட்டிகளும் மேற்கிந்திய தீவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கயானா நேஷனல் ஸ்டேடியம் (கயானா), டேரன் சம்மி கிரிக்கெட் ஸ்டேடியம் (செயின்ட் லூசியா ) மற்றும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் (ஆன்டிகுவா ) ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். அனைத்து போட்டிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து போட்டிகளும் நவம்பர் 9 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரின் முதல் போட்டி இந்திய - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நவம்பர் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.

இத்தொடரில் 10 அணிகள் பங்குபெறுகின்றன. இதில் 8 அணிகள் ஏற்கனவே தேர்ச்சி பெற்று விட்டன. மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதி தேர்வு, நெதர்லாந்தில் ஜூலை 7 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளும் அணிகள் விவரம் (தகுதி சுற்று):

வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, உகாண்டா மற்றும் யுனைடெட் அரபு எமிரேட்ஸ்.

10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன .

குரூப் ஏ :

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் குவாலிபையர் 1

குரூப் பி :

ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் குவாலிபைர் 2

இப்போட்டிகளில் முதல் முறையாக டிஆர்எஸ் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது .இதுவரை எந்த டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இதை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை வென்றது. இந்த முறை கோப்பை யாருக்கோ!

Story first published: Monday, June 25, 2018, 19:33 [IST]
Other articles published on Jun 25, 2018
English summary
ICC has released the Women's T20 WC schedule .It is slated to be held in West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X