For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கட்டாயத்தில் கோலி.. காத்திருக்கும் ரோஹித்.. தோனி வேடிக்கை.. இந்திய அணியில் நிகழும் பனிப்போர்!

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடையில் பனிப்போர் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடையில் பனிப்போர் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டியை பொறுத்தே அந்த முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கடைசியில் இந்திய அணி வெற்றியோடு தொடங்கி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

ஆனால் இந்த வெற்றி அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. முக்கிய வீரர்கள் எல்லோரும் சொதப்ப, மிகவும் கஷ்டப்பட்டு கொஞ்சம் போராடிதான் இந்திய அணி வெற்றியை ருசித்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி திணறி திணறி 227 ரன்கள் எடுத்தது. ஆனால் அந்த ரன்னை எடுக்கவே இந்திய அணி மோசமாக திணறியது. ரோஹித் சர்மா மட்டுமே 122 ரன்கள் அடித்தார். தவான், கோலி, கே எல் ராகுல் என்று எல்லோரும் ஏமாற்றம் அளித்தார்கள். கோலியின் விளையாட்டும் இதில் விமர்சனத்திற்கு உள்ளானது.

போர்

போர்

இதனால் தற்போது இந்திய அணிக்குள் முன்பு நிலவி வந்த பனிப்போர் மீண்டும் உயிர்பெற துவங்கி இருக்கிறது. ஆம் இந்திய அணியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் பிரச்சனை நிலவி வருகிறது. இந்திய அணியில் தேர்வு வாரியத்தில் மொத்தம் நான்கு லாபிக்கள் இருக்கிறது. ஒன்று சென்னை லாபி, இன்னொன்று பெங்களூர் லாபி, முக்கியமானது மும்பை மற்றும் டெல்லி லாபி.

இருக்கவே இருக்காது

இருக்கவே இருக்காது

இந்த நான்கு லாபிக்களால், இந்த நான்கு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பெறுவார்கள். உதாரணமாக மும்பை வீரர்கள் எப்போதும் இந்திய அணியில் இருப்பார்கள். டெல்லி பேட்ஸ்மேன்களும், கர்நாடகா பேட்ஸ்மேன்களும் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள். தமிழக பவுலர்களும் அணியில் இடம்பெறுவார்கள்.

கேப்டன்

கேப்டன்

இதில் கேப்டன் பதவியை பெறுவதில் எப்போதும் டெல்லி மற்றும் மும்பை இடையே பெரிய போட்டி இருக்கும். அதை எல்லாம் உடைத்து கேப்டனாக இருந்தவர்கள்தான் கங்குலியும், தோனியும். ஆனால் இப்போது டெல்லியை சேர்ந்த கோலி கேப்டனாக இருப்பது மும்பைக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால்தான் அணிக்குள் பனிப்போர் நிலவி வருகிறது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

கோலி இல்லாத சமயங்களில் இந்திய அணியை ரோஹித் வழி நடத்தி இருக்கிறார். ரோஹித் வழி நடத்திய தொடர்களில், சிறிதாக இருந்தாலும் இந்திய அணி வெற்றிபெற்று இருக்கிறது. மாறாக கோலியும் நல்ல கேப்டனாகவே இருக்கிறார். இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் ரோஹித், இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு கிடைத்தால் சரியாக அதை செய்வேன் என்று குறிப்பிட்டார்.

மீண்டும் வந்துள்ளது

மீண்டும் வந்துள்ளது

அவரின் இந்த பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கோலியின் சொதப்பலும், ரோஹித்தின் அதிரடியும் இந்த பனிப்போரை மீண்டும் பெரிதாக்கி உள்ளது. ஆனால் இதில் தோனி எந்த வகையிலும் தலையிடாமல் அமைதியாக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

இந்த உலகக் கோப்பையை வெல்லும் கட்டாயத்தில் கோலி இருக்கிறார். இல்லையென்றால் அணியை ரோஹித் கைப்பற்றும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மும்பை vs டெல்லி லாபிக்களின் மோதல் இந்திய அணியில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

Story first published: Friday, June 7, 2019, 11:27 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
ICC World Cup 2019: Cold war between Kohli and Rohit to lead the Indian team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X