For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. ஒரே நேரத்தில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு லக்.. அணியில் மாற்றம்!

நியூஸிலாந்திற்கு எதிராக நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிராக நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

உலகிலேயே தற்போது வலுவான கிரிக்கெட் அணியாக இந்திய அணி உருவாகி உள்ளது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் எல்லோரும் தற்போது முழு பார்மில் இருக்கிறார்கள்.

மீதம் இருக்கும் வீரர்களை வைத்தே இன்னொரு அணியை உருவாக்கும் அளவிற்கு எல்லோரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். முக்கியமாக ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறாத வீரர்களும் நல்ல பார்மில் தொடர்கிறார்கள்.

இன்று காலைதான் ஸ்கேன்.. ஆஸி.க்கு எதிராக வென்றாலும் வருத்தத்தில் கோலி.. என்ன நடந்தது? இன்று காலைதான் ஸ்கேன்.. ஆஸி.க்கு எதிராக வென்றாலும் வருத்தத்தில் கோலி.. என்ன நடந்தது?

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

இந்திய அணியில் இதனால் தற்போது புதிய வீரர்கள் இடம்பிடிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறி இருக்கிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், ஒன் டவுன் கோலி, 4வது இடத்தில் கே எல். ராகுல், 6 வது இடத்தில் தோனி, 7வது இடத்தில் பாண்டியா என்று எல்லோரும் நல்ல பார்மில் உள்ளனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்னும் 5 வது இடத்திற்கான வீரர்தான் முழு பார்மிற்கு திரும்பவில்லை. ஐந்தாவது இடத்தில் ஆடி வரும் கேதார் ஜாதவ் மிகவும் அதிர்ஷ்டம் உள்ள நபர். இவர் ஆடும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா எப்படியாவது வென்றுவிடும். ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் இவர் சரியாக விளையாடவில்லை.

ஏன் இல்லை

ஏன் இல்லை

இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக போட்ட ஒரே ஓவரில் அவரது பவுலிங்கை வீரர்கள் பறக்கவிட்டார்கள். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த நேரம் பார்த்து இவர் வந்த வேகத்தில் ரன்களை அள்ளிக்கொடுத்தார். மொத்தம் 14 ரன்களை ஒரே ஓவரில் கொடுத்தார். கடந்த இரண்டு போட்டியிலும் இவர் பேட்டிங் செய்ய பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

வேறு என்ன மாற்றம்

வேறு என்ன மாற்றம்

இதனால் அவரின் இடத்தில் தற்போது விஜய் சங்கர் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். நாளை மறுநாள் நியூஸிலாந்திற்கு எதிராக நடக்கும் போட்டியில் விஜய் சங்கர் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

எப்படி பிடிப்பார்

எப்படி பிடிப்பார்

தற்போது தவான் இடது கையில் பெருவிரலில் காயம் பட்டு இருக்கிறார். இதனால் அடுத்த ஒரு போட்டியில் மட்டும் அவர் விளையாடுவது சந்தேகம் என்கிறார்கள். இதனால் அவரின் இடத்தில் கேஎல் ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அங்குதான்

அங்குதான்

கே எல் ராகுல் களமிறங்கும் நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக் இறங்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. வருகிற போட்டிக்குள் தவான் தனது உடல் தகுதியை நிரூபிக்கவில்லை என்றால் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, June 11, 2019, 14:21 [IST]
Other articles published on Jun 11, 2019
English summary
ICC World Cup 2019: India playing eleven may see some changed in next match against New Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X