For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் மேட்ச் பார்க்க வந்திருக்கேன்.. வழியை விடுங்க.. இந்திய போட்டியை காண யார் வந்திருக்கா பாருங்க!

லண்டனில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண தொழிலதிபர் விஜய் மல்லையா வந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன்: லண்டனில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார். மோசடி செய்ததோடு லண்டனுக்கும் பறந்து எஸ்கேப் ஆனார்.

இவர் பறந்து சென்ற சமயத்தில் ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்கு உரிமையாளராக இருந்தார். ஆம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இவர் உரிமையாளராக இருந்தார்.

என்ன மோசடி

என்ன மோசடி

அவரை இன்னும் இந்தியா கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். லண்டனில் இவர் சில கிரிக்கெட் அணிகளை வாங்கும் எண்ணத்திலும் இருக்கிறார். அதேபோல் இவர் அங்கும் நிறைய தொழில்களை கவனித்து வருகிறார்.

என்ன வழக்கு

என்ன வழக்கு

இவருக்கு எதிரான வழக்கும் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவரை நாடு கடத்த இந்திய அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது. இவரை இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவிட்ட லண்டன் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தொழில் அதிபர் விஜய் மல்லையா செய்த மேல்முறையீடு மீது விசாரணை நடந்து வருகிறது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்திய நிலையில்தான் தற்போது லண்டனில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் எப்போது இந்தியா வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவர் சந்தோசமாக கிரிக்கெட் பார்க்க சென்று இருக்கிறார்.

பேட்டி அளித்தார்

முக்கியமாக மல்லையா கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார். அதில், வழக்கு குறித்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வழக்கு ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. நான் போட்டியை பார்க்க வந்து இருக்கிறேன். இதில் வேறு எதுவும் இல்லை, என்று குறிப்பிட்டு வேகமாக மைதானத்திற்குள் சென்றார்.

கோலிக்கு எதிராக

இவர் கோலிக்கு எதிராக சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்து இருந்தார். ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி மிக மோசமாக ஆடியது. இதனால் அந்த அணியின் கேப்டன் கோலியை கிண்டல் செய்யும் வகையில் மல்லையா டிவிட் செய்து இருந்தார். இப்போது இதே மைதானத்தில் கோலி கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவரின் வருகை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Story first published: Sunday, June 9, 2019, 17:41 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
London: Vijay Mallya arrives at The Oval cricket ground to watch #IndvsAus match; says, "I am here to watch the game.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X