மொத்தமாக அடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. அதிர வைக்கும் காரணங்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

World Cup 2019 : Ind Vs Nz : அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா?- வீடியோ

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த செமி பைனல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்புவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து இடையே தற்போது செமி பைனல் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பி வருகிறார்கள்.

களமிறங்கிய எல்லா பேட்ஸ்மேன்களும் மோசமாக விக்கெட் ஆகி வெளியேறி வருகிறார்கள். யாராவது இந்திய அணியை காப்பாற்ற மாட்டார்களா என்று எல்லோரும் நினைக்கும் அளவிற்கு இந்திய அணி பரிதாப நிலையை அடைந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா 1 ரன்கள் அடித்து இருந்த நிலையில் டாம் லதாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கோலி நியூசிலாந்தின் போல்ட் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அதன்பின் கே எல் ராகுல் 1 ரன், தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

மீண்டும் அவுட்டானார்

மீண்டும் அவுட்டானார்

அதன்பின்பு கொஞ்சம் பாண்டியா மற்றும் பண்ட் ஆடினார்கள். ஆனால் பண்ட் இந்த போட்டியிலும் தேவையில்லாமல் ஷாட்களை ஆடி வந்தார். இதனால் அவரும் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் பாண்டியா மற்றும் தோனி இருவரும் கொஞ்சம் நிலைத்து ஆடினார்கள்.

ஆனால் அவுட்

ஆனால் அவுட்

அதன்பின் பாண்டியாவும் 32 ரன்களில் அவுட்டானார். இந்திய அணியின் பேட்டிங் இப்படி சொதப்பியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது தோனி ஜடேஜா இருவர் மட்டும் தற்போது நிதானமாக ஆடி வருகிறார்கள்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணியின் பேட்டிங் சொதப்புவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய முடியாமல் பவுலிங் பிட்சாக மாறியது.

நேற்று மழை காரணமாக பிட்ச் பவுலிங் செய்ய ஏதுவாக மாறியது.

இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் நிற்காதது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மட்டும் இந்திய அணி முழுக்க நம்பி இருந்தது.

தோனியை நான்காவது இடத்தில் களமிறக்காதது என்று பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC World Cup 2019: What is the real reason for India's batting collapse?
Story first published: Wednesday, July 10, 2019, 18:16 [IST]
Other articles published on Jul 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X