உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்!

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தனிக்காட்டு ராஜாவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை அரையிறுதியுடன் தோற்று வெளியேறிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஒரு கை பார்ப்பது என கச்சிதமாக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி நிர்வாகம் அதற்கான திட்டத்தில் பாதி கிணறை வெற்றிகரமாக தாண்டி இருக்கிறார்கள். அப்படி என்ன தான் அந்த திட்டம்?

தோனியின் முக்கிய ரெக்கார்டை அடித்து உடைத்த கேப்டன் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 1, 2019 முதல் ஜூன் 14, 2021 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், ஆறு அணிகளுடன் டெஸ்ட் தொடரில் மோதும்.

120 புள்ளிகள்

120 புள்ளிகள்

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு தொடரில் எத்தனை போட்டிகள் இருந்தாலும், அந்த தொடருக்கு மொத்தமாக 120 புள்ளிகள் மட்டுமே வழங்கப்படும். போட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புள்ளிகள் அந்த தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் சரி சமமாக பிரித்து வழங்கப்படும்.

ஆறு தொடர்கள்

ஆறு தொடர்கள்

இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை தவிர்த்து ஆறு அணிகளுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மோதுகின்றது. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்த நிலையில், வங்கதேச தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்தியா ஆட உள்ளது.

இந்தியா திட்டம்

இந்தியா திட்டம்

இந்திய அணி இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற அரிய கௌரவத்தை வெல்ல பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு டெஸ்ட் தொடர்கள் தவிர மற்ற நான்கு தொடர்கள் இந்திய அணிக்கு சாதகமாக, எளிதாக வெற்றி பெரும் வகையிலேயே அமைந்துள்ளது.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

இந்த தொடரில் எளிதாக வெற்றி பெறும் அணிகளுக்கு எதிராக குறைந்த போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி வலுவான அணிகளுக்கு எதிராக அதிக போட்டிகளில் ஆடும் வகையில் அட்டவணையை அமைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், எளிதான அணிகளுக்கு எதிராக விரைவாக 120 புள்ளிகளை பெற முடியும். கடினமான அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்தாலும், அதிக போட்டிகள் என்பதால் குறைந்த புள்ளிகள் மட்டுமே இழக்க நேரிடும்.

தொடர் அட்டவணை

தொடர் அட்டவணை

உதாரணமாக, வங்கதேசம், வெ.இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நான்கு மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வலுவான நியூசிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா இரண்டு போட்டிகளில் ஆட உள்ளது. அது மட்டுமே, இந்திய அணிக்கு சாதகம் இல்லாத தொடராக அமைந்துள்ளது.

வெ.இண்டீஸ் வெற்றி

வெ.இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் தொடரில், இந்தியா இரு போட்டிகளையும் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 120 புள்ளிகளை பெற்றது.

தென்னாப்பிரிக்கா வெற்றி

தென்னாப்பிரிக்கா வெற்றி

அடுத்ததாக இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்தியா மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி எந்த வகையிலும் இந்திய அணிக்கு போட்டியாக ஆடவில்லை. இந்த தொடரிலும் 120 புள்ளிகளை பெற்றது.

வங்கதேசம் வெற்றி உறுதி

வங்கதேசம் வெற்றி உறுதி

அடுத்து தற்போது இந்திய மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று 60 புள்ளிகளை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என்றே கருதப்படுகிறது.

அதிக புள்ளிகள்

அதிக புள்ளிகள்

இதுவரை நடந்த போட்டிகளில் பெற்ற வெற்றிகள் மூலம் இந்தியா 300 புள்ளிகள் பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை 60 புள்ளிகளுடன் இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாதி கிணறை தாண்டி விட்ட இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : India’s master plan to win World Test Championship series. India planned the test series schedule to get more points easily.
Story first published: Saturday, November 16, 2019, 20:43 [IST]
Other articles published on Nov 16, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X