ஆத்தாடி.. அஸ்வின், பும்ரா ரெக்கார்டையே காலி செய்த இளம் பவுலர்.. தரமான சம்பவம்!

Chahal beat Ashwin, Bumrah record | அஸ்வின், பும்ரா ரெக்கார்டையே காலி செய்த இளம் பவுலர்.

நாக்பூர் : வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சாஹல் தன் 50வது டி20 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார்.

மிக விரைவாக 50 சர்வதேச டி20 விக்கெட்களை எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து இருக்கிறார் சாஹல்.

இதன் மூலம், இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்பதை நிரூபித்து இருக்கிறார் சாஹல்.

இடம் இல்லை

இடம் இல்லை

உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி டி20 தொடருக்கு இந்திய அணியை தயார் செய்ய முடிவு செய்தது, அப்போது அதுவரை டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடிக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இடம் பெற்றார்

இடம் பெற்றார்

இந்த நிலையில், வங்கதேச டி20 தொடருக்கான அணியில் சாஹல் இடம் பெற்றார். அவருக்கு இந்த தொடர் ஒரு தேர்வாகவே பார்க்கப்பட்டது. கிடைக்கும் வாய்ப்புகளில் அவர் நிரூபித்தால் மட்டுமே அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்ற நிலையில் இருந்தார்.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் 24 ரன்கள் மற்றும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். இரண்டு போட்டிகளில் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த அவர், இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் டி20 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

50 விக்கெட்கள்

50 விக்கெட்கள்

மூன்றாவது டி20யில் சற்று அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், முக்கியமான கட்டத்தில் மக்மதுல்லா விக்கெட்டை வீழ்த்தினார். அது அவரது 50வது டி20 விக்கெட்டாக அமைந்தது.

இந்திய அளவில் முதல் இடம்

இந்திய அளவில் முதல் இடம்

34 சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அளவில் மிக விரைவாக 50 டி20 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் சாஹல்.

மூன்றாவது இந்தியர்

மூன்றாவது இந்தியர்

இந்திய அளவில் இதுவரை அஸ்வின், பும்ரா மட்டுமே 50 டி20 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரராக சாஹல் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

அஸ்வின், பும்ரா சாதனை

அஸ்வின், பும்ரா சாதனை

அதே சமயம், அஸ்வின், பும்ராவை விட விரைவாக இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார். அஸ்வின் 42 போட்டிகளிலும், பும்ரா 41 போட்டிகளிலும் 50 விக்கெட் மைல்கல்லை எட்டினர். அவர்களை முறியடித்து 34 போட்டிகளிலேயே அதை எட்டி இருக்கிறார் சாஹல்.

ஐந்தாம் இடம்

ஐந்தாம் இடம்

உலகளவில் விரைவாக 50 டி20 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார் சாஹல். இந்த சாதனையை செய்யும் 24வது வீரர் சாஹல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் நான்கு இடங்கள்

முதல் நான்கு இடங்கள்

சாஹலுக்கு முன் முதல் நான்கு இடங்களில் இருக்கும் வீரர்கள் அஜந்தா மென்டிஸ் - 26 போட்டிகள், இம்ரான் தாஹிர் - 31 போட்டிகள், ரஷித் கான் - 31 போட்டிகள், முஸ்தாபிசூர் ரஹ்மான் - 33 போட்டிகள்.

எந்த நேரத்திலும்..

எந்த நேரத்திலும்..

ரோஹித் சர்மா இந்த தொடரின் இடையே சாஹல் குறித்து பேசுகையில், அவர் போட்டியின் எந்த நேரத்திலும் பந்து வீசக் கூடியவர் என்றார். தற்போது 50 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கும் சாஹல், அணியில் நிரந்தர இடம் பிடித்து விடுவார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Yuzvendra Chahal beat Ashwin, Bumrah record in T20
Story first published: Monday, November 11, 2019, 13:32 [IST]
Other articles published on Nov 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X