தம்பி.. டீம்ல இடம் இல்லை.. மூட்டை முடிச்சை கட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. ஷாக் கொடுத்த பிசிசிஐ!

Ind vs SL 3rd t20 | Sanju Samson failed in batting

மும்பை : சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு போட்டியில் மட்டுமே ஆட அவருக்கு வாய்ப்பளித்த நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணி ஞாயிறு இரவு அன்று அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் ரோஹித் சர்மா, முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டனர். அதே சமயம், சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

சஞ்சு சாம்சன் பார்ம்

சஞ்சு சாம்சன் பார்ம்

சஞ்சு சாம்சன் 2018 ஐபிஎல் முதல் நல்ல பார்மில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணியிலும் அவர் சிறப்பாக ஆடிய நிலையில் இந்திய டி20 அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்பட்ட போது, பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார். அதுவும் மாற்று வீரராக மட்டுமே அணியில் இடம் பெற்றார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

மாற்று வீரர் என்பதால் அவருக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தாலும், அந்த தகுதியும் அவருக்கு உதவவில்லை. அதற்கு காரணம், ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்திய அணி நிர்வாகம் சுமாராக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்து வந்த ரிஷப் பண்ட்டுக்கு அதிக ஆதரவு தருவதில் உறுதியாக இருந்தது சஞ்சு சாம்சனுக்கு பின்னடைவாக அமைந்தது.

ஒரே ஒரு போட்டி

ஒரே ஒரு போட்டி

இந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்த இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு அளித்து விட்டு, சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

சொதப்பிய சாம்சன்

சொதப்பிய சாம்சன்

அந்தப் போட்டியில் பேட்டிங் இறங்கிய உடன் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த அவர், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து சொதப்பினார். எனினும், ஒரு போட்டியில் மட்டுமே அவர் வாய்ப்பு பெற்று சரியாக ஆடவில்லை என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பப்பட்டது.

நியூசிலாந்து தொடரில் நீக்கம்

நியூசிலாந்து தொடரில் நீக்கம்

ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த இலங்கை தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியதால் அணியில் இடம் இன்றி சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

வெறும் ஒரு போட்டி மட்டுமே களமிறங்க வாய்ப்பளித்து, அதில் சரியாக ஆடாததை காரணம் காட்டி சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சில ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவம் துபே நிலை

சிவம் துபே நிலை

சிவம் துபே தன் முதல் தொடரில் பெரிதாக ரன் குவிக்கவில்லை என்றாலும், அடுத்த தொடரில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன் பின்பே அவர் தன்னை நிரூபித்தார். அது போல ஏன் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர் ரசிகர்கள்.

இது சரியா?

இது சரியா?

ரிஷப் பண்ட்டுக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னரும் அவர் சரியான பார்மில் இருப்பதாக உறுதியாக கூட முடியவில்லை. அவருக்கு நீண்ட வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில், சஞ்சு சாம்சனுக்கும் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs NZ : Sanju Samson dropped from the T20 team. He just got chance to play in one match in the Sri Lanka series.
Story first published: Monday, January 13, 2020, 12:07 [IST]
Other articles published on Jan 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X