For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு” நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்

அகமதாபாத்: நியூசிலாந்துடனான டி20 போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-களின் நிலைமை அதிர்ச்சி அளித்ததாக ஹர்திக் பாண்ட்யா குற்றம் சாட்டிய சூழலில் சூர்யகுமார் யாதவ் மாற்று கருத்தை கூறியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

இந்த தொடரின் மீதான பரபரப்பை விட, பிட்ச்-ல் குளறுபடி நடந்ததா என்ற பேச்சு தான் பரபரப்பாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வைத்த குற்றச்சாட்டு தான்.

ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்! ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்!

பிட்ச்-ல் பிரச்சினை

பிட்ச்-ல் பிரச்சினை

அதாவது முதல் டி20ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2வது இன்னிங்ஸில் பிட்ச்-ல் அதிக ஸ்பின் இருந்தது. 2வது டி20 ஒருபடி மேல் சென்று 2 இன்னிங்ஸ்களிலும் ஏகபோகத்திற்கு ஸ்பின் இருந்தது. மொத்தமுள்ள 40 ஓவர்களில் 30 ஓவர்களை ஸ்பின்னர்கள் மட்டுமே வீசினர். இதில் ஒரு சிக்ஸர்கள் கூட செல்லவில்லை. குறிப்பாக 100 ரன்களை மட்டுமே இலக்காக வைத்து, அதையும் இந்தியா தடுமாறி எட்டியது.

ஹர்திக் குற்றச்சாட்டு

ஹர்திக் குற்றச்சாட்டு

இதுகுறித்து பேசியிருந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 2 டி20க்களிலும் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-கள் அதிர்ச்சியை தந்தன. இவை டி20க்கு ஏற்ற களங்களே கிடையாது. பிட்ச் குரேட்டர் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்தால் இப்படி தான் ஆகும் என விளாசியிருந்தார். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரும் தோல்விக்கு காரணமாக இதையே தான் கூறினார்.

சூர்யகுமார் விளக்கம்

சூர்யகுமார் விளக்கம்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து துணைக்கேப்டன் சூர்யகுமார் பேசியுள்ளார். அதில், எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. அது நமது கட்டுப்பாட்டில் இல்லை. இருக்கின்ற பிட்ச்-ல் நம்மால் என்ன செய்யமுடியுமோ அது தான் நமது கையில் இருக்கும். எப்படி அந்த களத்திற்கு ஏற்றார் போல செயல்பட்டு, இரு அணிகளும் மோதுகின்றன. சுவாரஸ்யமாக இருப்பது மட்டுமே முக்கியமாகும்.

பாண்ட்யாவுடன் ஆலோசனை

பாண்ட்யாவுடன் ஆலோசனை

போட்டி என்று வந்துவிட்டால், சவால்களை ஏற்றுக்கொண்டு முடிந்தவரை போராட வேண்டும் அவ்வளவு தான். பாண்ட்யா குற்றச்சாட்டை வைத்த பின்னர், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். இனி எதிர்காலத்தில் இதுபோன்று வந்தால் எப்படி சமாளிப்பது என்று மட்டும் தான் யோசித்தோம், மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை என சூர்யகுமார் கூறியுள்ளார்.

அதிகாரி நீக்கம்

அதிகாரி நீக்கம்

இதுஒருபுறம் இருக்க, ஹர்திக் பாண்ட்யாவின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, சம்பந்தப்பட்ட பிட்ச் வடிவமைப்பாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக இந்திய நிர்வாகம் தான் பிட்ச்-ஐ சூழலுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு கேட்டதாக அந்த அதிகாரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 31, 2023, 19:54 [IST]
Other articles published on Jan 31, 2023
English summary
IND vs NZ: Team India Vice Captain Suryakumar yadav reaction for Hardik Pandya's allegation of Lucknow pitch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X