For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி யூஸ்லெஸ்.. டீமை விட்டு தூக்கணும்.. பொங்கி எழுந்த வெதர்மேன்.. வெடித்த சர்ச்சை!

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி தொடர்ந்து மோசமாக ஆடி வரும் நிலையில், அவரே தன்னை அணியை விட்டு நீக்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் ட்விட்டரில் கூறி உள்ளார்.

அவரது கருத்துக்கு கோலி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்வின் நீக்கம் பற்றியும் அவர் கருத்து கூறி இருக்கிறார். அதுவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க.. அதிரடி ஆட்டம்.. சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த இளம் வீரர்! முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க.. அதிரடி ஆட்டம்.. சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த இளம் வீரர்!

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி படு மோசமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது. கோலி நியூசிலாந்து சுற்றுப்பயணம் முழுவதுமே ரன் குவிக்க திணறி வருகிறார்.

கோலி பேட்டிங்

கோலி பேட்டிங்

முதல் டெஸ்ட் போட்டியில் 2 மற்றும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தார். இரண்டாவது டெஸ்டில் அவர் தன் பழைய ஆட்டத்தை ஆடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களை 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார்.

அஸ்வின் நீக்கம்

அஸ்வின் நீக்கம்

இரண்டாவது டெஸ்டில் அஸ்வினை நீக்கி இருக்கிறார் கோலி. அதற்கு காரணம், அஸ்வின் பேட்டிங்கில் கை கொடுக்கவில்லை என்பதே. அவருக்கு பதில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின் நீக்கம், கோலி மோசமான பார்ம் இரண்டையும் இணைத்து நியாயம் கேட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

வெதர்மேன் கருத்து

"ஏன் பேட்ஸ்மேன், பவுலர்களுக்கு மாறுபட்ட அளவுகோல்கள்? புற்கள் அதிகம் உள்ள ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் தேவை இல்லை என்பதால் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதே ஏன் கோலி தனக்கே செய்து கொள்ளக் கூடாது. "

எந்தப் பயனில்லை

எந்தப் பயனில்லை

"உங்களை நீக்கிக் கொண்டு, ஷுப்மன் கில்லுக்கு அணியில் வாய்ப்பு அளியுங்கள். பந்து ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் உங்களால் எந்தப் பயனும் இல்லை மிஸ்டர் கோலி. சில சூழல்கள் மோசமாகும் போது, கோலியின் மோசமான பக்கம் தெரிகிறது" என கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

ஸ்விங் ஆடுகளங்கள்

ஸ்விங் ஆடுகளங்கள்

கோலி ஸ்விங் ஆடுகளங்களில் சரியாக ரன் குவிப்பதில்லை என்பதே இவரின் முக்கிய குற்றச்சாட்டு. அஸ்வின் போன்ற வீரர்களை சூழ்நிலைக்கு ஏற்ப தேவையில்லை என முடிவு செய்து அணியை விட்டு நீக்கும் கோலி, ஸ்விங் ஆடுகளங்களில் தன்னால் ஆட முடியாது என் ஒப்புக் கொண்டு தானே விலக வேண்டும் எனவும் அதிரடியாக கூறுகிறார்.

மல்லுக்கட்டிய ரசிகர்கள்

மல்லுக்கட்டிய ரசிகர்கள்

இவரின் இந்த வெளிப்படையான தாக்குதலுக்கு பலத்த எதிர்ப்பும் எழுந்தது. கோலி ரசிகர்கள் பொங்கி எழுந்து பதில் அளித்தனர். பலரும் கோலி 2018 இங்கிலாந்து தொடரில் அதிக ரன் குவித்ததை சுட்டிக் காட்டினர். ஆனால், அப்போது இங்கிலாந்து ஆடுகளங்களில் அதிக ஸ்விங் இல்லை என குறிப்பிட்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் வெதர்மேன்.

ரசிகர்கள் ஆதரவு

கோலிக்கு ஆதரவாக பேசிய பலர் கோலி தற்காலிகமாக பார்ம் இழந்து இருக்கிறார். அவரை அணியை விட்டு விலகச் சொல்வது எல்லாம் தவறு என கருத்து கூறி உள்ளனர். அஸ்வினை நீக்கியது தவறு என்பதை மற்றும் ஏற்றுக் கொள்ளலாம் எனவும் சிலர் கூறி உள்ளனர்.

ரசிகர் பதிலடி

கோலி ஸ்விங் ஆடுகளத்தில் நன்றாக ஆடுவார் என கூறியவர்களிடம் ஆதாரம் கேட்டார் வெதர்மேன். ஒரு ரசிகர், 2014 நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி சதம் அடித்ததை படம் போட்டு சுட்டிக் காட்டி ஸ்விங் ஆடுகளத்தில், அதுவும் இதே நியூசிலாந்து மண்ணில் கோலி ரன் குவித்துள்ளார் என பதிலடி கொடுத்தார்.

உண்மை தான்

கோலி வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஸீமிங் ஆடுகளங்கள் மற்றும் பச்சை பசேல் என இருக்கும் ஆடுகளங்களில் கோலி செயல்பாடு சராசரிக்கும் கீழே உள்ளது உண்மை தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்கள் பற்றி பேசுபவர்கள் அங்கே கோலி எந்த ஆடுகளத்தில் அல்லது ரோடில் ஆடினார் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என கோலி ரசிகர்களுக்கு ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆக மொத்தத்தில், மழையைப் பற்றி பேசி வந்த வெதர்மேன் போட்ட ஒரு கிரிக்கெட் கருத்து, ட்விட்டரை அதகளம் செய்துள்ளது.

Story first published: Saturday, February 29, 2020, 17:24 [IST]
Other articles published on Feb 29, 2020
English summary
IND vs NZ : Tamilnadu Weatherman wants to drop Kohli from the team. Fans roasted him for the same.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X