For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பூச்சாண்டி காட்டிய தென்னாப்பிரிக்கா.. திருப்பி அடித்த இந்தியா..!! 12 ஆண்டுகளில் முதல் முறை..

சென்சூரியன்: இந்தியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியனில் இன்று தொடங்கியது

மழை மேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் இருந்ததால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?

ஆனால், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி தவறானமுடிவு எடுத்துவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்

கர்நாடக ஜோடி

கர்நாடக ஜோடி

இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன், 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஒரு ஆல் ரவுண்டர் என்ற முறையில் கோலி அணியை கட்டமைத்து இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடக்க வீரர்களாக கர்நாடக ஜோடியான கே.எல்.ராகுல், மாயங் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.

பூச்சாண்டி கதை

பூச்சாண்டி கதை

ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போல் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படவில்லை. காரணம், மழை பொழிவு இருந்ததால், களத்தில் ஈரம் அதிகமாக இருந்தது. இதனால் வேகப்பந்துவீச்சு எடுபடவில்லை. இதனால் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு வெறும் பூச்சாண்டி கதையாக மாறிவிட்டது.

லைஃப் கொடுத்த டிகாக்

லைஃப் கொடுத்த டிகாக்

இருப்பினும் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆஃப் சைடுக்கு வெளியே வீசிய பந்தை இந்திய வீரர்கள் தொடாமல் நாங்கள் ராகுல் டிராவிட்டின் சிஷ்யர்கள் என நிரூபித்தனர். இருப்பினும் மாயங் அகர்வால் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். மாயங் அகர்வால் 36 ரன்கள் எடுக்கும் போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை குயின்டன் டி காக் தவறவிட்டார்.

தொடக்க வீரர்கள் அபாரம்

தொடக்க வீரர்கள் அபாரம்

முதல் நாள் மதிய உணவு நேர இடைவேளையின் போது இந்திய அணி 28 ஓவர் எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஆசியாவிற்கு வெளியே இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 20 ஓவர்களை விக்கெட்டு இழப்பின்றி எதிர்கொண்டது இது 16 முறை. இதில் நடப்பாண்டில் மட்டும் 7 முறை இந்திய தொடக்க வீரர்கள் விக்கெட்டுகளை 20 ஒவர் வரை விட்டுத்தரவில்லை. செஞ்சூரியனில் கடந்த 12 அண்டுகளில் இது முதல் முறை. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்த மூன்றாவது இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றது.

Story first published: Sunday, December 26, 2021, 20:56 [IST]
Other articles published on Dec 26, 2021
English summary
Ind vs SA 1st Test Brilliant Performance from openers மதிய உணவு நேர இடைவேளையின் போது இந்திய அணி 28 ஓவர் வரை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X