தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா? வெளியான தகவலால் பரபரப்பு.. IND Vs SA தொடர் ரத்தாக வாய்ப்பு..!!

சென்சூரியன்: உலகம் முழுவதம் தற்போது ஒமைக்கரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவே இந்தியாவில் 3வது அலை ஏற்பட காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமைக்கரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வைரஸ் வேகமாக பரவி வருகிற நேரத்தில் தான் இந்தியா டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது.

இதனால் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தொடரை ரத்து செய்துவிட்டு இந்திய அணி நாடு திரும்பும் என பி.சி.சி.ஐ. கூறியிருந்தது.

இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..

ஏன் களமிறங்கவில்லை

ஏன் களமிறங்கவில்லை

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஆலிவியர் திரும்பினார். அனுபவமும் திறமையும் வாய்ந்த இவர் முதல் டெஸ்ட்டில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக மார்கோ ஜென்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனால் அவர் ஏன் களமிறங்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.

இந்தியா கேள்வி?

இந்தியா கேள்வி?

அப்போது, ஆலிவியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய அணி, இது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியது.

வாரியம் விளக்கம்

வாரியம் விளக்கம்

இதற்கு பதில் அளித்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஆலிவியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அது இப்போது ஏற்படவில்லை. தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்டு, குணமடைந்துவிட்டார். அது உறுதியான பிறகு தான் அவர் அணியில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளது

தீவிர விதிகள்

தீவிர விதிகள்

கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும், உடல் அளவில் கொஞ்சம் சோர்வாக ஆலிவியர் இருந்ததால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பயோ பபுள் முறை தீவிரமாக கடைப்பிடித்து வருவதாகவும், வெளிநபர்கள் வீரர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரமாக இருந்தது. தற்போது அது 3000 என்ற அளவில் குறைந்துள்ளது. இது இன்னும் குறைய வாய்ப்புள்ளதால், இந்தியா, தென்னாப்பிரிக்க தொடருக்கு பாதிப்பு ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs SA 1st Test – Covid scare in SA camp தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா? வெளியான தகவலால் பரபரப்பு.. IND Vs SA தொடர் ரத்தாக வாய்ப்பு..!!
Story first published: Tuesday, December 28, 2021, 19:56 [IST]
Other articles published on Dec 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X