செஞ்சூரியன் டெஸ்ட்டில் திரில்லர்.. இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு.. சாதிக்குமா கோலி படை..??

சென்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களும் எடுத்தன.

2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?

130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

16 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் நான்வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது.நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 10 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் சதம் விளாசிய ராகுல், 23 ரன்களில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து புஜாராவுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

ஏமாற்றிய கோலி

ஏமாற்றிய கோலி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 18 ரன்களில் வெளியேற, புஜாரா 16 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அதிரடியாக விளையாடிய ரஹானே 23 பந்துகளில் 20 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து தடுமாறிய இந்திய அணியை மீட்கும் பொறுப்பு அஸ்வின், ரிஷப் பண்ட் தலையில் வந்து விழுந்தது.

ரிஷப் பண்ட் அதிரடி

ரிஷப் பண்ட் அதிரடி

தமிழக வீரர் அஸ்வினால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து ரிஷப் பண்ட் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார். 6 பவுண்டரிகள் விளாசிய அவர் 34 ரன்களை விளாசினார். இதன் பின்னர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2வது இன்னிங்சில் இந்திய அணி 174 ரன்களில் சுருண்டது.

305 ரன்கள் இலக்கு

305 ரன்கள் இலக்கு

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழக்க,பீட்டர்சன் 17,வென்டர் டுசன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய கேப்டன் டீன் எல்கார் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்துள்ளத. அந்த அணியின் வெற்றிக்கு மேலும் 211 ரன்கள் தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட் தேவை. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs SA 1st Test Day 1- India set 305 Target to Win for SA தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது
Story first published: Wednesday, December 29, 2021, 18:32 [IST]
Other articles published on Dec 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X