For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெயர் மட்டும் ராகுல் அல்ல.. செயலிலும் ராகுல் தான்.. குருவை மிஞ்சிய சிஷியன்..!!

சென்சூரியன்: கிரிக்கெட்டில் மிகவும் கடினமானது டெஸ்ட் கிரிக்கெட் தான்.. அதிலும் கடினம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இருப்பது தான்

அதிலும் கடினம் எது தெரியுமா, அந்நிய மண்ணில் தொடக்க வீரராக விளையாடுவது தான்.

2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?

அப்படி விளையாடி சதம் விளாசினால், அவருக்கு கிடைக்கும் மரியாதையே தனி தான். இதனால் தான் கவாக்ர், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார்

அசத்தும் ராகுல்

அசத்தும் ராகுல்

தற்போது இந்திய அணியின் தொடக்க வீரராக அவதாரம் எடுத்துள்ள கே.எல். ராகுல், அப்படி ஒரு பெயரை தான் எடுத்து வருகிறார். கம்பீர், சேவாக்கிற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு ஒரு நல்ல தொடக்க வீரர் அமையாமல் இருந்தார். ஆனால் அந்த குறையை மெல்ல, மெல்ல போக்கி வருகிறார் கே.எல்.ராகுல்.

7 சதம்

7 சதம்

கே.எல். ராகுல் அடித்துள்ள 7 சதங்களில் அதில் ஒரு சதம் மட்டும் தான் இந்தியாவில். ஆஸ்திரேலியாவில் 1 சதம்,இங்கிலாந்தில் 2 சதம்,மேற்கிந்தியத் தீவுகளில் 1 சதம், இலங்கையில் 1 சதம், தென்னாப்பிரிக்காவில் 1 சதம் என வெளிநாட்டில் மட்டும் 6 சதங்கள் விளாசியுள்ளார் கே.எல்.ராகுல்.

வரலாற்றை மாற்றினார்

வரலாற்றை மாற்றினார்

இந்த தொடருக்கு முன்பு வரை கே.எல். ராகுலின் தென்னாப்பிரிக்கா ரெக்கார்ட் மோசமாகவே அமைந்தது. கே.எல்.ராகுலின் சராசரி வெறும் 7 என்ற நிலையில் இருந்தது. தற்போது அந்த சோக வரலாறை சதம் மூலம் மாற்றி எழுதிவிட்டார் கே.எல்.ராகுல். இன்னும் அவர் நியூசிலாந்தில் மட்டும் தான் சதம் விளாசவில்லை. அதனையும் மாற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

ராகுல் டிராவிட்டை போல் ராகுல் என்ற பெயரும், அவரை போலவே பெங்களூருவிலும் வந்துள்ள கே.எல்.ராகுல், தற்போது அவரை போலவே அந்நிய மண்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் குருவை சீஷியன் மீஞ்சிவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சதம் என்பதை இரட்டை சதம் என்று அவர் மாற்றினால், கவாஸ்கர், குக் போன்ற வரிசையில் அவரும் கால் எடுத்து வைப்பார்

Story first published: Monday, December 27, 2021, 0:15 [IST]
Other articles published on Dec 27, 2021
English summary
Ind vs SA 1st Test Indian opener KL Rahul scored Brilliant century. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X