For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாதனை படைத்த புஜாரா.. கடும் கோபத்தில் பி.சி.சி.ஐ, ரசிகர்கள்..!! IND VS SA 1st TEST

சென்சூரியன்: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்வார்கள். ஆனால் புஜாரா விசயத்தில் ரசிகர்கள் அந்த எல்லையை எப்போதோ தாண்டிவிட்டனர்

புஜாரா நட்சத்திர வீரர், அனுபவ வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லவே இல்லை. ஆனால் கடந்த கால வரலாற்றுக்காக, இன்னும் எத்தனை நாள் தான் புஜாராவுக்கு வாய்ப்பு தருவார்கள்

2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?

ஆனால், புஜாராவின் நேர்மைக்கு நாம் தலைவணங்கியே அக வேண்டும். சொன்ன படியே புஜாரா செய்துவிட்டார். என்ன புரியவில்லையா?

புஜாராவின் பேச்சு

புஜாராவின் பேச்சு

தென்னாப்பிரிக்க தொடர் தொடங்கவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த புஜாரா, இந்திய அணி வெற்றி பெறும், ஆனால் அது என் கையில் மட்டும் இல்லை. பந்துவீச்சாளர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் தான் 20 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதாவது அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்களுக்கு இப்போது வேலை இல்லை என்பது போல் அவரது பேச்சு அமைந்தது.

கோல்டன் டக்

கோல்டன் டக்

அவர் சொன்னது போல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய புஜாரா, எதிர்கொண்ட முதல் பந்திலே அழகாக ஷாட் லேக்கில் நின்றவரிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்காகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வரலாற்றில் , மூன்றாவதாக இறங்கும் நபர் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையை புஜாரா படைத்தார்.

பி.சி.சி.ஐ. கோபம்

பி.சி.சி.ஐ. கோபம்

புஜாராவின் இந்த சொதப்பல், பி.சி.சி.ஐ.யும் சேர்த்து வெறுப்படைய செய்து இருக்கும். ஏனென்றால் போட்டி தொடங்குவதற்கு முன் புஜாராவுக்கு பி.சி.சி.ஐ. ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில், இந்த தொடரில் புஜாரா சிறப்பாக ஆடிய தீர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டி இருந்தது.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

ஆனால், நம் புஜாரா நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறது என்ற பாணியில் விளையாடுகிறார். ஏற்கனவே விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், புஜாரா மீண்டும்.. மீண்டும் ஏமாற்றுவது காண்போரை எரிச்சலடைய செய்கிறது.

Story first published: Monday, December 27, 2021, 0:18 [IST]
Other articles published on Dec 27, 2021
English summary
Ind vs SA 1st Test Pujara golden duck created record சாதனை படைத்த புஜாரா.. கடும் கோபத்தில் பி.சி.சி.ஐ, ரசிகர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X