திடீரென சூடுபிடித்த அட்டம்.. 3வது டி20ல் இந்தியா தோல்வி.. 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை!

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

 

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டி20 தொடரில் முதல் போட்டியை இந்தியாவும், 2வது போட்டியை இலங்கையும் கைப்பற்றி 1 -1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

IND vs SL 1st T20 LIVE: Team India Clash with Srilanka tonight in Colombo.

11:03 pm

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என கைப்பற்றியது.

10:47 pm

12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 48 பந்துகளில் 26 ரன்கள் தேவை.

10:43 pm

8 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்களை இழந்து 35 ரன்களை எடுத்துள்ளது. அடுத்தடுத்து 2 விக்கெட்களை எடுத்து ராகுல் சஹார் அசத்தல்.

10:12 pm

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 90 பந்துகளில் 60 ரன்கள் தேவை.

09:59 pm

2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 77 ரன்கள் தேவை.

09:35 pm

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எடுத்தது. இலங்கை அணி 82 ரன்கள் இலக்கு.

09:35 pm

16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை எடுத்து தடுமாற்றம். அணியின் ஸ்கோரை உயர்த்த டெயில் எண்டர்ஸ் முயற்சி.

09:35 pm

இந்திய அணியில் 6வது விக்கெட் வீழ்ந்தது. 15 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் எடுத்து திணறல்.

08:50 pm

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியை மீட்க குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் போராட்டம்.

08:49 pm

8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்கோரை உயர்த்த நிதிஷ் ராணா போராட்டம்.

08:34 pm

30 ரன்களுக்குள் 4 விக்கெட்.. இளம் வீரருக்கு வந்த மிகப்பெரிய பொறுப்பு.. சரிவில் இருந்து மீளுமா இந்திய அணி?

08:30 pm

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 25 ரன்களை எடுத்துள்ளது. நிதிஷ் ராணா, புவனேஷ்வர் குமார் நிதான ஆட்டம்.

08:30 pm

ஒரே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றம். சஞ்சு சாம்சன், ருத்ராஜ் கெயிக்வாட் அடுத்தடுத்து அவுட்

08:22 pm

இந்திய அணியில் 2வது விக்கெட் வீழ்ந்தது. நிதானமாக ஆடி வந்த தேவ்தத் பட்டிக்கல் 9 ரன்களுக்கு அவுட்டானார்.

08:18 pm

3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்களை எடுத்துள்ளது. ருத்ராஜ் கெயிக்வாட் 8 ரன்களும், பட்டிக்கல் 7 ரன்களும் எடுத்து நிதான ஆட்டம்.

07:33 pm

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

11:30 pm

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. தொடரையும் கைப்பற்றியது.

11:09 pm

16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 24 பந்துகளில் 34 ரன்கள் தேவை.

10:50 pm

12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 52 பந்துகளில் 65 ரன்கள் தேவை.

10:36 pm

10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 60 பந்துகளில் 75 ரன்கள் தேவை.

10:20 pm

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற 90 பந்துகளில் 104 ரன்களை தேவை.

09:30 pm

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்தது. இலங்கைக்கு 133 ரன்கள் இலக்கு.

09:24 pm

17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை எடுத்துள்ளது. புவனேஷ்வர் குமார் 3 ரன்களும், நிதிஷ் ராணா 2 ரன்களும் எடுத்து நிதான் ஆட்டம்.

09:07 pm

இந்திய அணியில் 3வது விக்கெட் சரிந்தது. சிறப்பாக ஆடி வந்த இளம் வீரர் தேவ்தத் பட்டிக்கல் 29 ரன்களுக்கு அவுட்.

09:07 pm

14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 92 ரன்களை சேர்த்துள்ளது. சஞ்சு சாம்சன் (4), தேவ்தத் பட்டிக்கல் (25) நிதான ஆட்டம்.

09:01 pm

இந்திய அணியில் 2வது விக்கெட் சாய்ந்தது. சிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவான் 40 ரன்களுக்கு அவுட்டானார்.

08:47 pm

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவான் 33 ரன்களுடனும், பட்டிக்கல் 5 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

08:30 pm

4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் தவான் 16 ரன்களுடனும், ருத்ராஜ் 13 ரன்களுடனும் சிறப்பான ஆட்டம்.

08:17 pm

2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், ஷிகர் தவான் சிறப்பான ஆட்டம்.

11:34 pm

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி. 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை அணி.

11:25 pm

18 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 125 ரன்களை சேர்த்துள்ளது. வெற்றி பெற இன்னும் 12 பந்துகளில் 40 ரன்கள் தேவை.

11:10 pm

15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை எடுத்துள்ளது. தசுன் சனகா 4 ரன்களும், சாரித் அசலங்கா 44 ரன்களும் எடுத்து நிதான ஆட்டம்.

11:09 pm

12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. சாரித் அசலங்கா 24 ரன்களுடனும், அசென் பாண்டரா 8 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

10:41 pm

10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 101 ரன்கள் தேவை.

10:37 pm

8 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 12 ஓவர்களில் 113 ரன்கள் தேவை.

10:29 pm

இலங்கை அணியில் 3வது விக்கெட் வீழ்ந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற அவிஷிங்கா ஃபெர்னாண்டோ (26) கேட்ச் ஆனார்.

10:24 pm

இலங்கை அணியின் 2வது விக்கெட்டை சாய்த்தார் யுவேந்திர சஹால். அந்த வெற்றி பெற இன்னும் 82 பந்துகளில் 117 ரன்கள் தேவை.

10:18 pm

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 15 ஓவர்களில் 121 ரன்கள் தேவை.

10:10 pm

இலங்கை அணியில் முதல் விக்கெட் சரிந்தது. க்ருணால் பாண்ட்யா வீசிய 3 ஓவரில் மினோத் பனுக்கா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

09:45 pm

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இலங்கை அணிக்கு 165 ரன்கள் டார்கெட்.

09:18 pm

இந்திய அணியில் 3வது விக்கெட் சரிந்தது. அதிரடி காட்டி வந்த கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

09:11 pm

14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவான் 46 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 37 ரன்களுடனும் அதிரடி ஆட்டம்.

09:02 pm

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவான் 27 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுடனும் அதிரடி ஆட்டம்.

08:29 pm

4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 18 ரன்களும் சஞ்சு சாம்சன் 10 ரன்களும் எடுத்து நிதான ஆட்டம்.

07:38 pm

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
ND vs SL 1st T20 LIVE: Team India Clash with Srilanka tonight in Colombo.
Story first published: Sunday, July 25, 2021, 15:36 [IST]
Other articles published on Jul 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X