For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரால பண்ண முடியும் போது உங்களால முடியாதா ஷமி? மோசமான சாதனை செய்து மாட்டிக் கொண்ட ஷமி!

Recommended Video

Watch Video : India won their 2nd test against west indies

கிங்க்ஸ்டன் : ஷமிக்கு இப்படி ஒரு சிக்கல் வரும் என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார். இதற்காக அவரை குற்றம் சொல்லவும் முடியாது. அப்படி என்னதாங்க செய்தார்?

கடந்த ஆறு டெஸ்ட் இன்னிங்க்ஸில் ஷமி ரன்னே எடுக்கவில்லை. சரி, ஷமி பத்தாவது பேட்ஸ்மேன் தானே, அவரிடம் ரன் எதிர்ப்பார்ப்பதில் நியாயம் இல்லையே என்று கேட்கலாம். ஆனால், அவர் பேட்டிங்கையும் விமர்சிக்க துவங்கி இருக்கிறார்கள் டி20 காலத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்துள்ளார் ஷமி. இரண்டிலும் டக் அவுட் ஆகி உள்ளார். முதல் டெஸ்டில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

ஆறு டெஸ்ட் இன்னிங்க்ஸ்

ஆறு டெஸ்ட் இன்னிங்க்ஸ்

இரண்டாவது டெஸ்டில் "கொஞ்சம் அதிகமாக" 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். இத்துடன் சேர்த்து கடந்த ஆறு டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் தொடர்ந்து ரன் எடுக்காமல், நான்கு முறை டக் அவுட்டும் ஆகி உள்ளார் ஷமி.

மோசமான சாதனை

மோசமான சாதனை

மேலும், இந்திய அளவில் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அஜீத் அகர்கர் தொடர்ந்து 5 போட்டிகளில் டக் அவுட் ஆனதே சாதனையாக இருந்தது.

முதல் டக்

முதல் டக்

ஆறு டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் தொடர்ந்து ரன் எடுக்காமல் அதை முறியடித்துள்ளார் ஷமி. ரன்னே எடுக்காத இந்த ஆறு இன்னிங்க்ஸ் பயணம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அடிலெய்டு டெஸ்டின் இரண்டாம் இன்னிங்க்ஸில் தொடங்கியது.

தொடர் சொதப்பல்

தொடர் சொதப்பல்

அடுத்து பெர்த் டெஸ்டில் ஒரு முறை டக் அவுட் மற்றும் ஒரு முறை ரன் எடுக்காமல் களத்தில் நின்றார். மெல்போர்ன் டெஸ்டில் ஒரு இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி அதில் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி இரண்டிலும் டக் அவுட்.

ஷமி மீது விமர்சனம்

ஷமி மீது விமர்சனம்

இரண்டு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பதை நீக்கி விட்டு பார்த்தால், நான்கு போட்டிகளில் ரன் எடுக்கவில்லை. இதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக, இஷாந்த் சர்மா இரண்டாவது டெஸ்டில் அரைசதம் அடித்த நிலையில் பலரும் ஷமி பற்றி விமர்சிக்கின்றனர்.

இஷாந்த் பயிற்சி

இஷாந்த் பயிற்சி

முன்பு இஷாந்த் சர்மா சில பந்துகள் கூட தாக்குப் பிடிக்காமல் இருந்த நிலை இருந்தது. ஆனால், பந்தை தடுக்க வேண்டிய பயிற்சிகள் மேற்கொண்ட இஷாந்த் சர்மா, கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் களத்தில் நின்று வருகிறார்.

இஷாந்த் அசத்தல் ஆட்டம்

இஷாந்த் அசத்தல் ஆட்டம்

அதிலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் டெஸ்டில் நீண்ட நேரம் களத்தில் நின்று ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்தார். ஜடேஜா இவர் உதவியுடன் மளமளவென ரன் குவித்தார். இரண்டாவது டெஸ்டில் அரைசதமே அடித்து விட்டார் இஷாந்த் சர்மா.

இன்று உள்ள சூழல்

இன்று உள்ள சூழல்

இன்று உள்ள கிரிக்கெட் சூழ்நிலையில், பந்துவீச்சாளர்களும் ஓரளவு பேட்டிங் செய்து ரன் குவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அந்த நிலையை எட்டி விட்டனர்.

பயிற்சி பெற வேண்டும்

பயிற்சி பெற வேண்டும்

இந்திய அணியும் அதை நோக்கி செல்ல திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. ஷமி விரைவில் தன் பேட்டிங் திறனை வளர்த்துக் கொண்டால் அணிக்கு நல்லது. ஷமி ஒரே ஒரு முறை டெஸ்டில் அரைசதம் அடித்துள்ளார். ஆம், இங்கிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார் ஷமி. ஆனால், இஷாந்த் சர்மா போல பந்தை தடுக்கும் திறனை அவர் பெறவில்லை என்பதே அதன் பின் அவரால் தாக்குப் பிடித்து பேட்டிங் செய்ய முடியாமல் போனதற்கு காரணம்.

Story first published: Monday, September 2, 2019, 20:57 [IST]
Other articles published on Sep 2, 2019
English summary
IND vs WI 2019 : Shami haven’t scored a single run in last 6 test innings, while Ishant Sharma just scored half century in test match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X