For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த பவுலரும் செய்ய முடியாத அந்த சம்பவம்.. ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. நடந்தே சென்ற விவியன் ரிச்சர்ட்ஸ்!

கிங்க்ஸ்டன் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன் நேரலையில் பேசிக் கொண்டு இருந்த விவியன் ரிச்சர்ட்ஸ் உடல்நலம் குன்றினார்.

அவரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் எடுத்து வரப்பட்டது. அதைக் கண்ட இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

கிங்க்ஸ்டன் மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

ஆத்தாடி.. புஜாரா காலி.. வந்தவுடன் டெரர் காட்டிய மலை மனிதன்.. 100 ஆண்டு சாதனையை உடைத்தார்!ஆத்தாடி.. புஜாரா காலி.. வந்தவுடன் டெரர் காட்டிய மலை மனிதன்.. 100 ஆண்டு சாதனையை உடைத்தார்!

முந்தைய நிகழ்ச்சி

முந்தைய நிகழ்ச்சி

சோனி தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பிய போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சியில் விவியன் ரிச்சர்ட்ஸ் பேசிக் கொண்டு இருந்தார். போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தன் கருத்துக்களை கூறி வந்தார்.

பதற்றம் அடைந்தனர்

திடீரென தனக்கு உடல்நலம் சரியாக இல்லை என கூறவே ஸ்ட்ரெச்சர் எடுத்து வரப்பட்டது. அதைக் கண்ட ரசிகர்கள் என்ன ஆச்சு? என பதற்றம் அடைந்தனர். விவியன் ரிச்சர்ட்ஸ்-க்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது.

தானே நடந்து சென்றார்

தானே நடந்து சென்றார்

ஸ்ட்ரெச்சர் எடுத்து வரப்பட்டாலும், அதெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு இருவரின் உதவியுடன் நடந்தே மைதானத்தை விட்டு வெளியேறினார் விவியன் ரிச்சர்ட்ஸ். அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அதிக வெப்பமான சூழல்

அதிக வெப்பமான சூழல்

கிங்க்ஸ்டனில் நிலவிய அதிக வெப்பமான சூழ்நிலை காரணமாக அவருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்தது தான் உடல்நலம் குன்ற காரணம் என பின்னர் தெரிய வந்தது. அதனால், அவருக்கு பெரிய பாதிப்புகள் ஏதும், ஏற்படவில்லை.

மீண்டும் வர்ணனை

மீண்டும் வர்ணனை

மருத்துவமனையில் இருந்து மீண்டும் போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு திரும்பிய ரிச்சர்ட்ஸ் மீண்டும் வர்ணனை செய்ய அமர்ந்தார். அப்போது உற்சாகமாக காணப்பட்டார். அதனால், ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அவரும் வேடிக்கையாக பேசி ரசிகர்களுக்கு தான் நன்றாக இருப்பதை அறிவித்தார்.

என்ன சொன்னார் ரிச்சர்ட்ஸ்?

என்ன சொன்னார் ரிச்சர்ட்ஸ்?

நான் குணமடைந்துவிட்டேன் என்று உலகெங்கிலும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன், நான் மீண்டும் வர்ணனை செய்ய திரும்ப வந்துள்ளேன்" என்று அவர் கூறினார். அடுத்து இயற்கையை பற்றி வேடிக்கையாக பேசினார்.

இயற்கை செய்து விட்டது

இயற்கை செய்து விட்டது

உலகில் எந்த பந்து வீச்சாளரும் எனக்கு அதை செய்ய முடியாது, ஆனால், இயற்கை செய்துவிட்டது என்று கூறி வெப்பம் தன்னை வீழ்த்தி விட்டதை கூறினார். நாம் இயற்கையை மதிக்க வேண்டும், என்றும் கூறினார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

மிரண்டு போவார்கள்

மிரண்டு போவார்கள்

அவர் ஆடிய காலத்தில் அவரைக் கண்டு பந்துவீச்சாளர்கள் மிரண்டு போவார்கள். அதைத் தான் இயற்கையோடு ஒப்பிட்டு கூறி இருக்கிறார். இந்த டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரர்களும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர்.

ஷனான் கேப்ரியல் வெளியேறினார்

ஷனான் கேப்ரியல் வெளியேறினார்

கிங்க்ஸ்டன் மைதானம் 67 வயது விவியன் ரிச்சர்ட்ஸ்-க்கு மட்டுமல்ல, போட்டியில் ஆடிய வீரர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போல, போட்டி துவங்கிய சில நிமிடங்களில் வேகப் பந்துவீச்சாளர் ஷனான் கேப்ரியல் வெப்பம் தாங்க முடியாமல் சிறிது நேரம் ஆடுகளத்தை விட்டு விலகிச் சென்றார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலரும் வெப்பத்தால் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

கோலி அசத்தல்

கோலி அசத்தல்

முதல் நாளில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. கோலி 76 ரன்களும், மாயங்க் அகர்வால் 55 ரன்களும் எடுத்தனர். இந்தியா எளிதாக 350 ரன்களை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, August 31, 2019, 15:08 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
IND vs WI 2019 : Vivian Richards fell ill before second test match during live show
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X