For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் கூட இப்படி சிக்குவோம்னு எதிர்பார்க்கல.. பந்துவீச்சில் சறுக்கி விட்டோம்.. ரோகித் கருத்து

ஐதராபாத் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் அருகே இருந்த நிலையில் நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரஸ்வெல் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு ஆட்டம் காண்பித்தார்.

சுப்பிரமணியபுரம் படத்தில் வருவது போல் எனக்கு சாவு பயத்தை காமிச்சுட்டா பரமா என்ற பயத்திலேயே இந்திய வீரர்கள் நின்றனர். எனினும் ஒரு வழியாக பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிராஸ்வெல் விளையாடிய ஆட்டத்தை பார்த்து மிரண்டு விட்டோம் .

விராட் கோலி தியாகம் செய்ய வேண்டும்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் தந்த யோசனை.. சரிப்பட்டு வருமா? விராட் கோலி தியாகம் செய்ய வேண்டும்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் தந்த யோசனை.. சரிப்பட்டு வருமா?

பாராட்டு

பாராட்டு

பிராஸ்வெல் விளையாடும் போது பேட்டில் இருந்து பந்து நன்றாக வந்தது. மைதானத்திற்கு வெளியே பந்தை தூக்கி பிரமாதமாக அடித்தார். போட்டி தொடங்கும் போது நான் இதைத்தான் குறிப்பிட்டேன். நாம் சரியாகப் பந்து வீசினோம் என்றால் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம். கொஞ்சம் பந்துவீச்சில் சறுகினாலும் நிச்சயம் தோல்வியை நோக்கி தான் செல்வோம் என்று கூறினேன்.

சறுக்கி விட்டோம்

சறுக்கி விட்டோம்

நான் நினைத்தது போலவே பந்து வீச்சில் சறுக்கி விட்டோம். டாஸ் வீசும் போது கூட சொன்னேன் சவால்களை சந்திக்க விரும்புகிறோம் என்று கூறினேன். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று கொஞ்சம் நினைக்கவில்லை. எங்களுடைய பேட்டிங்கில் சுப்மான் கில் சிறப்பாக விளையாடினார். அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அதனை அவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.

கலக்கி வருகிறார்

கலக்கி வருகிறார்

அதற்காகத்தான் இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர் ரன் அடிக்க தொடங்கி விட்டால் அணியின் ஸ்கோர் நகர்ந்து கொண்டே இருக்கும். அவருடைய பேட்டிங் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. எங்களுடைய பந்துவீச்சில் சிராஜ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். இன்றைய ஆட்டத்தில் மட்டுமல்ல டெஸ்ட் மற்றும் டி20 கூட அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். சிராஜ் பந்துவீச்சில் செயல்படும் முறை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

நியூசி. கேப்டன் கருத்து

நியூசி. கேப்டன் கருத்து

தனக்கு என்ன தேவையோ தங்களுடைய பிளானை சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறார். இதுபோன்றுதான் மற்ற பந்துவீச்சாளர்களும் இருக்க வேண்டும் என்று ரோகித் சர்மா பாராட்டினார். இதேபோன்று நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம் பேசுகையில், பிராஸ்வெல் ஆட்டம் சிறப்பாக இருந்தது. 130 ரன்கள் 6 விக்கெட் என்ற நிலையில் இருந்து வெற்றி பெறும் அளவுக்கு வந்தோம். எனினும் வெற்றிக்கொட்டை தாண்ட முடியாதது வருத்தம் தான். நெருக்கடியான சமயத்தில் இப்படித்தான் அதிரடியாக விளையாட வேண்டும் என்றும் அவர் பிராஸ்வெல்லை பாராட்டினார்.

Story first published: Wednesday, January 18, 2023, 23:12 [IST]
Other articles published on Jan 18, 2023
English summary
India captain Rohit sharma on brilliant comeback from NZ கொஞ்சம் கூட இப்படி சிக்குவோம்னு எதிர்பார்க்கல.. பந்துவீச்சில் சறுக்கி விட்டோம்.. ரோகித் கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X