For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அயர்லாந்துக்கு எதிரான அபார வெற்றி.. இந்தியா படைத்த சாதனைகள்!

டப்ளின்: இந்திய அயர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் சில சாதனைகளையும் படைத்துள்ளது இந்தியா.

இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இதுவே அதிகமாகும். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும்.

india ireland t20 series


ஒட்டுமொத்தமாக இது இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

இந்திய அணிக்கெதிராக குறைந்த ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றது. அயர்லாந்து 70 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து குவித்த 80 ரன்களே சர்வதேச அளவில் இந்திய அணிக்கெதிரான குவிக்கப்பட்ட குறைந்தபட்ச டி20 ஸ்கோர் ஆகும்.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 6 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.இவர் தனது முதலாவது டி20 போட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.
india ireland t20 series


தனது முதலாவது டி20 போட்டிக்கும் , இரண்டாவது டி20 போட்டிக்கும் இடையே அவர் 65 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக இந்திய அணி 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் ரெய்னா அடிக்கும் ஐந்தாவது அரைசதம் இதுவாகும். கடந்த 8 ஆண்டுகளில் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரெய்னா அடிக்கும் இரண்டாவது அரைசதம் இதுவாகும்.

இந்திய சுழல் பந்துவீச்சாளர் சாஹல் , ஒரு போட்டியில் 3 மற்றும் அதற்கு மேல் விக்கெட்கள் எடுப்பது இது 7 ஆவது முறையாகும்.இவருக்கு அடுத்தபடியாக அஸ்வின் உள்ளார்(5 முறை).






Story first published: Sunday, July 1, 2018, 14:47 [IST]
Other articles published on Jul 1, 2018
English summary
India have registered many records against Ireland in the recently held T20 series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X