For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தனி ஒருவன் கோலியின் சதம் வீண்.. ஆஸி.யிடம் போராடி வீழ்ந்த இந்தியா.. 281 ரன்களுக்கு ஆல் அவுட்

ராஞ்சி:ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்த தொடரில் ஆஸி. அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே இந்தியா 6 விக்கெட்கள் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந் நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகல், இரவு மோதலாக நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் உள்ளனர். இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அடிச்சது 14 ரன்.. ஆனா தோனியுடன் சாதனை லிஸ்டில் சேர்ந்த ரோஹித் சர்மா! அடிச்சது 14 ரன்.. ஆனா தோனியுடன் சாதனை லிஸ்டில் சேர்ந்த ரோஹித் சர்மா!

313 ரன்கள் குவிப்பு

313 ரன்கள் குவிப்பு

களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியில் கவாஜா 104 ரன்களும், ஆரோன் பின்ச் 93 ரன்களும் எடுத்தனர்.இந்த போட்டியின் மூலம், பின்ச் மீண்டும் பார்முக்கு வந்தார்.

கவாஜா சதம்

கவாஜா சதம்

அவருடன் கை கோர்த்து அதிரடியில் கலக்கிய உஸ்மான் கவாஜா 104 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 193 ஆக இருந்த போது தான் இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது.

மேக்ஸ்வெல் அதிரடி

மேக்ஸ்வெல் அதிரடி

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தார், மார்க்கஸ் 31 ரன்கள் குவித்து இறுதி நேரத்தில் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

குல்தீப்புக்கு 3 விக்கெட்

குல்தீப்புக்கு 3 விக்கெட்

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 313 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை குவித்தார். சமி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

314 ரன்கள் இலக்கு

314 ரன்கள் இலக்கு

ஆரம்பத்தில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் ரன் விகிதம் குறைந்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

ஒரு ரன்னில் அவுட்

ஒரு ரன்னில் அவுட்

தொடக்க வீரர்களாக... தவானும், ரோகித்தும் களம் இறங்கினர். வழக்கம் போல் ஒரு ரன்னும் திருப்தியடைந்த தவான்... பொறுப்பின்றி ரிச்சர்ட்ஸன் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோகித் 14 ரன்கள்

ரோகித் 14 ரன்கள்

அணிக்கு நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித்தும் 14 ரன்களில் ஏமாற்றினார். அணியின் ஒட்டுமொத்த சுமையும் வழக்கம்போலவே... கேப்டன் கோலி மீது விழுந்தது.

போல்டான ராயுடு

போல்டான ராயுடு

அவருடன் இருந்த அம்பத்தி ராயுடுவும்... கமின்ஸ் பந்தில் போல்டாக ரசிகர்கள் நொந்து போயினர். பெரும் ஆரவாரத்துடன் அடுத்து களமிறங்கினார் தோனி.

தோனி ஏமாற்றம்

தோனி ஏமாற்றம்

தல தோனியும், கேப்டன் கோலியும் உள்ளனர்...இனி வெற்றி நமக்கு தான் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பந்துகளை தேர்ந்தெடுத்து ஆடிய தோனி 26 ரன்களில் வெளியேறி சொந்த ஊர் ரசிகர்களை மட்டுமல்ல... உலக ரசிகர்களையே ஏமாற்றினார்.

தனியாக நின்ற கோலி

தனியாக நின்ற கோலி

அப்போது அணியின் ஸ்கோர் 86... 4 விக்கெட்டுகள் போயிருந்தன. ஒரு முனையில் கோலி மட்டும் தனிஒருவனாக நின்று கொண்டிருக்கிறார். 5வது விக்கெட்டுக்கு கோலியுடன், ஜாதவ் கைகோர்த்தார். இருவரும் அணியை சரிவில் இருந்த மீட்க தொடங்கினர். கோலி வழக்கம் போல... கிடைக்கின்ற பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி ரசிகர்களை குஷிபடுத்தினார்.

ஜாதவ்வும் அவுட்

ஜாதவ்வும் அவுட்

மறு முனையில்.. விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்றபடியே... ஜாதவ் விளையாடினார். ஸ்கோர் 174ஐ எட்டியபோது ஜாதவ் வெளியேறினார். அதன்பிறகு.. கடந்த போட்டியின் நம்பிக்கை நாயகன் விஜய் சங்கர் வந்தார்.

கோலி போல்டு

கோலி போல்டு

ஏதாவது மாயாஜாலம் நடக்காதா என்று ரசிகர்கள் காத்திருந்த வேளையில்.. சதத்தை கடந்து 123 ரன்கள் குவித்த கோலி சம்பா பந்தில் போல்டானார். ஒரு கணம் மைதானத்தில் மயான அமைதி.அணியின் ஸ்கோர் 219 ரன்கள் என்றிருந்த போது... கோலி பெவிலியன் திரும்ப ரசிகர்கள் முடிவு என்னவாக இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்க தொடங்கினர்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

விஜய் சங்கர், ஜடேஜா, முகமது சமி என பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். முடிவில்.. 49வது ஓவரில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 32 ரன்களில் தோல்வியை தழுவியது. முதன்முறையாக... இந்த தொடரில் அதுவும் தல தோனியின் சொந்த ஊரில் முதல் வெற்றியை ஆஸி அணி பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக, கவாஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Story first published: Friday, March 8, 2019, 22:17 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
Australia beats india by 32 runs in ranchi and Australia is still alive in this series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X