For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரும் பரபரப்பு.. எதிர்ப்பு கோஷத்துடன் இந்திய கிரிக்கெட் அணி பஸ்சை முற்றுகையிட்ட பாக். விஷமிகள்!

By Veera Kumar

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வந்த பஸ் அருகே நின்றபடி பாகிஸ்தானை சேர்ந்த சிலர் இந்தியாவே வெளியேறு என கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று எட்ஸ்பாஸ்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் சந்தித்தன. 2 வருடங்கள் கழித்து இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

முன்நதாக நேற்று காலையில் லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது. பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு, லண்டன் தாக்குதலை தொடர்ந்து மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என பிசிசிஐ எதிர்பார்த்திருந்தது.

காஷ்மீர் கோஷம்

காஷ்மீர் கோஷம்

ஆனால், அங்கு நடந்ததோ வேறு. நேற்று விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சொகுசு பஸ்சில் ஸ்டேடியத்திற்கு வந்தபோது அவர்களின் பஸ்சை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், "காஷ்மீருக்கு விடுதலை கொடு", "இந்தியாவே வெளியேறு" என கோஷமிட்டனர். பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்திய ரசிகர்கள் குவிந்தனர்

இந்திய ரசிகர்கள் குவிந்தனர்

அந்த பகுதியில் இந்திய ரசிகர்கள்தான் அதிக எண்ணிக்கையில் நின்றிருந்தனர். ஆனாலும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முதலில் புரியவில்லை. காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக கூறி கோஷமிட்டு பிறநாடுகளின் கவனத்தை ஈர்க்க நடந்த அரசியல் காய் நகர்த்தல் அந்த போராட்டம் என்பது பிறகுதான் இந்திய ரசிகர்களுக்கு புரிந்தது.

வாழ்த்து கோஷம்

வாழ்த்து கோஷம்

ஆனால், அதற்குள்ளாக கோஷமிட்டவர்கள் நைசாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பதிலாக, இந்திய ரசிகர்களின், "கோஹ்லிஇஇஇ..", டோணிஇஇஇ" போன்ற உச்ச ஸ்ஸதாபி வாழ்த்து கோஷங்கள் விண்ணை முட்ட ஆரம்பித்தன.

பாதுகாப்பு பிரச்சினை

பாதுகாப்பு பிரச்சினை

இந்தியாவில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாட்டை பார்த்திருக்க முடியாது. கிரிக்கெட் வீரர்கள் செல்லும் பஸ்களை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் வாகனங்களில் செல்வார்கள். சில நிமிடங்களுக்கு அந்த சாலையில் பிறருக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் சமீபகாலமாக, தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

Story first published: Monday, June 5, 2017, 12:23 [IST]
Other articles published on Jun 5, 2017
English summary
As Virat Kohli and company emerged from the team bus, they were greeted with strident anti-India slogans. They chants of "Kashmir azaad hai" and "Go back India".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X