For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனையா! பத்து ஓவரில் 1 விக்கெட் கூட இல்லை.. மிரட்டிய ஆஸி. ஓபனிங்!

ராஞ்சி : மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்துவீச்சில் திணறியது இந்திய அணி.

ஒருநாள் தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் தொடர்ந்து இந்திய அணி பவர் ப்ளே ஓவர்களான முதல் பத்து ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களை பிரிக்க தவறியுள்ளது.

தோனி பேச்சை கேட்கலைனா இப்படி தான்! 2வது ஓவரிலேயே டிஆர்எஸ்-ஐ வீணாக்கிய கேப்டன் கோலி! தோனி பேச்சை கேட்கலைனா இப்படி தான்! 2வது ஓவரிலேயே டிஆர்எஸ்-ஐ வீணாக்கிய கேப்டன் கோலி!

இரண்டாம் போட்டி கூட்டணி

இரண்டாம் போட்டி கூட்டணி

இதை பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா மூன்றாம் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டினர். நாக்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்த ஜோடி 83 ரன்கள் குவித்தது.

அதிரடி கூட்டணி

அதிரடி கூட்டணி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனிப்பட்ட முறையில் கவாஜா 38, பின்ச் 37 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால், மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் பலவீனத்தை கணித்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து சாதனை செய்தனர்.

ஆரோன் பின்ச் பார்ம்

ஆரோன் பின்ச் பார்ம்

கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடி 93 ரன்கள் எடுத்தார். குறைந்த ஓவர் போட்டிகளில் கடந்த 22 இன்னிங்க்ஸ்களில் இது தான் பின்ச் அடிக்கும் முதல் அரைசதம் ஆகும். இப்படி பார்ம் அவுட்டில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டனை பார்முக்கு கொண்டு வர உதவியுள்ளனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

இரண்டு போட்டிகளில் 50+

இரண்டு போட்டிகளில் 50+

இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் முதல் பத்து ஓவர்களில் இவர்களை பிரிக்கத் தவறியதால், இருவரும் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 50+ ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர்.

இது பின்னடைவு

இது பின்னடைவு

இந்தியாவில் நடந்த கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக எதிரணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 50+ ரன்களை எடுத்துள்ளது. உலகக்கோப்பைக்கு செல்லும் முன் இந்திய அணிக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, March 8, 2019, 16:32 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
India vs Australia 3rd ODI : India failed to get a wicket in first 10 overs in 2 consecutive matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X