For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது ஒருநாள் போட்டியில் “ஆர்மி கேப்” அணிந்து விளையாடும் இந்திய அணி.. தோனி தான் காரணம்!

Recommended Video

ஆர்மி கேப் அணிந்து விளையாடும் இந்திய அணி- வீடியோ

ராஞ்சி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்தனர்.

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் வகையிலும் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொப்பியை அணிந்துள்ளனர்.

உலக கோப்பை தான் முக்கியம்.. ஐபிஎல்லில் வெளியேறுவேன்? சொன்ன இந்திய வீரர் உலக கோப்பை தான் முக்கியம்.. ஐபிஎல்லில் வெளியேறுவேன்? சொன்ன இந்திய வீரர்

இந்திய அணி மரியாதை

பிசிசிஐ இது குறித்து தெரிவித்துள்ள செய்தியில், "புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்கள் மற்றும் ஆயுதப் படைகளை குறிப்பிடும் வகையில் இந்திய அணி இன்று ராணுவ வீரர்களுக்கான தொப்பியை அணிந்து விளையாட உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

போட்டி சம்பளம்

போட்டி சம்பளம்

மேலும், இன்றைய போட்டிக்கான சம்பளத்தை வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களின் கல்வி செலவுக்கும் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி தான் கூறினார்

வீரர்களுக்கான தொப்பி அணியும் முடிவை தோனி தான் தெரிவித்தார் என கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கலோனல் ஆக கௌரவ பதவியில் இருக்கும் தோனி, தான் வீரர்களுக்கு இந்த சிறப்பு தொப்பியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்ணனையாளர்கள்

மேலும், வர்ணனை செய்து கொண்டிருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சுனில் கவாஸ்கர், முரளி கார்த்திக், ஹர்ஷா போக்ளே உள்ளிட்டோரும் இதே தொப்பியை அணிந்தனர்.

Story first published: Friday, March 8, 2019, 14:19 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
India vs Australia 3rd ODI : Indian team wears camouflage cap as a respect to Pulwma Martyrs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X