For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அவுட் இல்லையா? என்ன ரிவ்யூ பண்றீங்க? அம்பயரின் தவறான முடிவால் அதிர்ச்சியான கோலி!

Recommended Video

அம்பயரின் தவறான முடிவால் அதிர்ச்சியான கோலி!- வீடியோ

மொஹாலி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. எனினும், அதை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற முடியாமல் போனது. இந்த போட்டியில் முக்கியமான கட்டத்தில், டிஆர்எஸ் ரிவ்யூ ஒன்று தவறாகச் சென்றது.

என்னத்த சொல்றது... பீல்டிங் சொதப்பல்... ஸ்டம்பிங்கிலும் கோட்டை விட்டோம்... குமுறும் கோலி என்னத்த சொல்றது... பீல்டிங் சொதப்பல்... ஸ்டம்பிங்கிலும் கோட்டை விட்டோம்... குமுறும் கோலி

ஸ்டம்ப்பிங் முயற்சி

ஸ்டம்ப்பிங் முயற்சி

44வது ஓவரின் 4வது பந்தை வீசினார் சாஹல். அந்த பந்தை பேட்ஸ்மேன் டர்னர் தவறவிட்டார். பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஸ்டம்ப்பிங் செய்ய முயன்றார். அதே சமயம், பந்து பேட்டில் பட்டது என்பதற்கு கேட்ச் மூலம் அவுட் கேட்டார் பண்ட்.

அவுட் இல்லை

அவுட் இல்லை

இந்தியா ரிவ்யூ கேட்டது. முதலில் ஸ்டம்பிங்கிற்கு ரிவ்யூ பார்க்கப்பட்டது. பேட்ஸ்மேன் காலை கிரீசுக்குள் வைத்திருந்தார். எனவே, அதற்கு அவுட் இல்லை என்பது உறுதியானது. அடுத்து, கேட்ச் குறித்து ஸ்னிக்கோ மீட்டர் மூலம் பார்க்கப்பட்டது.

கேட்ச் இல்லை

கேட்ச் இல்லை

ஸ்னிக்கோவில் பந்து பேட்டை கடந்த உடன் அதிர்வு தெரிந்தது. இருந்தும், பேட்டை பந்து கடந்து விட்டது என்பதால் அவுட் கொடுக்கப்படவில்லை. சரி, அவுட் தான் கொடுக்கவில்லை எனப் பார்த்தால், இதற்கு வைடும் கொடுத்தார் அம்பயர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால், கோலி அதிர்ச்சி அடைந்தார். ஸ்னிக்கோ மீட்டரில் அதிர்வு தெரிந்தும், அவுட் கொடுக்கவில்லை. ஒருவேளை, பந்து பேட்டை கடந்து விட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்த அதிர்வு எதனால், ஏற்படுகிறது என்ற குழப்பம் உள்ளது.

இது எப்படி வைடு?

இது எப்படி வைடு?

ஒருவேளை பந்து பேட்ஸ்மேனின் ஆடையில், உடலில் கூட லேசாக உரசி இருக்கலாம். அப்படி இருந்தால், இது எப்படி வைடு ஆகும்? மூன்றாவது போட்டியில் இதே போல, பால் ட்ராக்கிங் முறை குறித்து ஆரோன் பின்ச்சின் ரிவ்யூவின் போது சர்ச்சை எழுந்தது. தற்போது, அதே ஸ்னிக்கோ மீட்டரில் சர்ச்சை எழுந்துள்ளது.

Story first published: Monday, March 11, 2019, 10:42 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
India vs Australia 4th ODI : Virat Kohli says DRS becomes talking point in every game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X