“அவருக்கு” மட்டும் நிறைய வாய்ப்பு.. ஆனா அம்பதி ராயுடுவுக்கு கிடையாதா? இது அநியாயம்! எகிறும் கம்பீர்

Gambhir slams selectors | அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடையாதா? எகிறும் கம்பீர்

டெல்லி : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டி நடைபெற்ற போது வர்ணனை செய்து கொண்டிருந்த கௌதம் கம்பீர் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து சூடாக பேசியுள்ளார்.

அம்பதி ராயுடு ஆஸ்திரேலிய தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்றார். அந்த போட்டிகளில் அவர் 13, 18, 2 என சொற்ப ரன்களே எடுத்தார். அதனால், அவர் பார்மில் இல்லை எனக் கூறி அடுத்த இரு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அடடே! தோல்வி அடைந்த இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டிய இர்ஃபான் பதான்!

நன்றாக ஆடினார்

நன்றாக ஆடினார்

இதை குறிப்பிட்டு பேசிய கம்பீர், அம்பதி ராயுடு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நன்றாக ஆடினார். அதன் பின் நியூசிலாந்து தொடரில் நன்றாக ஆடினார். அதில் ஒரு போட்டியில் இந்தியா தோற்கும் நிலையில் இருந்த போது தனி ஆளாக 90 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

மூன்று வாய்ப்புகள் தான்

மூன்று வாய்ப்புகள் தான்

ஆனால், ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளில் மட்டும் சரியாக ஆடவில்லை என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷிகர் தவான் பார்முக்கு திரும்ப 19 இன்னிங்க்ஸ் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பதி ராயுடுவுக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்றார் கம்பீர்.

நியாயமாக நடந்துக்கணும்

நியாயமாக நடந்துக்கணும்

மேலும், கேப்டன் கோலியை நேரடியாக விமர்சித்தார். "நீங்கள் கேப்டன் என்றால் எல்லோருக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தவான் முக்கியமான வீரர், அவருக்கு உலகக்கோப்பைக்கு முன் அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்றால், அதே விஷயம் அம்பதி ராயுடுவுக்கும் பொருந்தும்" என்றார்.

தொடர்ந்து வாய்ப்பு

தொடர்ந்து வாய்ப்பு

ஷிகர் தவானும் ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை. எனினும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவே நான்காவது போட்டியில் சதம் அடித்தார் அவர்.

தவான் மோசம்

தவான் மோசம்

எனினும், ஐந்தாவது போட்டியிலும் தவான் ஒற்றை இலக்க ரன் மட்டுமே எடுத்து சொதப்பினார். அவரது கடைசி 20 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் சில அரைசதங்கள், சதம் தவிர மிக மோசமாகவே ஆடியுள்ளார். சராசரியும் குறைவே.

சராசரி அதிகம்

சராசரி அதிகம்

ஆனால், அம்பதி ராயுடு கடந்த ஆண்டு முதல் 14 இன்னிங்க்ஸ்களில் 464 ரன்கள் குவித்துள்ளார். இதன் சாராசரி 42.18 ஆகும். இந்த நிலையில், மூன்று போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என அவரை நீக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Australia : Dhawan get more chances but Ambati Rayudu was dropped says Gambhir
Story first published: Thursday, March 14, 2019, 16:44 [IST]
Other articles published on Mar 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X