For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த ஊரில் கடைசி போட்டி! விழா நடத்த திட்டம் போட்ட நிர்வாகிகள்.. ஆனா தோனி விடுவாரா?

ராஞ்சி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.

தோனியின் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் தோனியை சிறப்பிக்கும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

எங்க நாட்டு காவலர்களுக்கு கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்கும்.. ஹெய்டனுக்கு நக்கல் பதில் சொன்ன கவாஸ்கர்! எங்க நாட்டு காவலர்களுக்கு கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்கும்.. ஹெய்டனுக்கு நக்கல் பதில் சொன்ன கவாஸ்கர்!

பெயர் சூட்டும் திட்டம்

பெயர் சூட்டும் திட்டம்

அதில் ஒன்று தான் போட்டி நடைபெறும் மைதானமான ஜே.எஸ்,சி,ஏ மைதானத்தின் வடக்குப் பிரிவுக்கு. "மகேந்திர சிங் தோனி பெவிலியன்" என பெயர் சூட்டுவது. இந்த பெயர் சூட்டு விழாவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என தோனியிடம் கேட்டுள்ளனர் மைதான நிர்வாகிகள்.

இது சொந்த வீடு

இது சொந்த வீடு

ஆனால், தோனி அடக்கமாக இதற்கு மறுத்துள்ளார். "என் சொந்த வீட்டில் என்ன புதிதாக ஆரம்பிக்க இருக்கிறது? எனக் கூறி தன் பெயரை பெவிலியனுக்கு சூட்டுவதற்கு நாசூக்காக மறுப்பு தெரிவித்துள்ளார் தோனி.

கடந்த ஆண்டு எடுத்த முடிவு

கடந்த ஆண்டு எடுத்த முடிவு

இது பற்றி பேசிய மைதான நிர்வாகி சக்ரபர்த்தி, கடந்த ஆண்டு நடந்த வருடாந்திர கூட்டத்தில் செய்தியாளர்கள் பகுதி மற்றும் வி.ஐ.பி. பகுதி அடங்கிய வடக்குப் பிரிவிற்கு தோனியின் பெயரை சூட்ட முடிவு செய்திருந்தோம் என்றார். ஆனால், தற்போது தோனி பெயர் சூட்டு விழாவிற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

தற்போது தோனியின் பெயரை சூட்ட ராஞ்சி மைதான நிர்வாகிகள் ஆர்வமாக இருக்க மற்றொரு காரணமும் உள்ளது. தோனி வரும் 2019 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார் என கூறப்படுகிறது.

கடைசி போட்டி இது?

கடைசி போட்டி இது?

அது உண்மை என்றால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி தான் தோனி சொந்த மண்ணில் ஆடவுள்ள கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கும். அதை சிறப்பிக்கவே, மைதான நிர்வாகிகள் முயன்று வருகின்றனர்.

வேறு நிகழ்ச்சி இல்லை

வேறு நிகழ்ச்சி இல்லை

எனினும், தோனி பெயர் சூட்டு விழாவிற்கு மறுத்துள்ள நிலையில், சொந்த மண்ணில் தோனியின் கடைசி போட்டியை கொண்டாட வேறு எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என தெரிகிறது.

தோனி அதிரடி காட்டுவாரா?

தோனி அதிரடி காட்டுவாரா?

தோனி தன் சொந்த மண்ணில் சதம் அடித்து, பினிஷிங் செய்து வைத்தால் கூட அது கொண்டாட்டமாக தான் இருக்கும். மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனி தன் சொந்த ஊரின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்துவாரா?

Story first published: Thursday, March 7, 2019, 11:53 [IST]
Other articles published on Mar 7, 2019
English summary
India vs Australia : Dhoni humbly refused to inaugurate Dhoni Pavilion
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X