For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் இல்லைனா இந்தியா “வீக்”கா தான் இருக்கும்.. கங்குலி சொல்லும் அந்த வீரர் யார்?

கொல்கத்தா : இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்தது.

முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி, பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்துவீச்சு பலம் குறைந்ததாகவே உள்ளது என கூறினார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸி. அணி 5 விக்கெட் இழந்து 288 ரன்கள் குவித்தது.

கடைசி 10 ஓவர்கள்

கடைசி 10 ஓவர்கள்

இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்களை எடுக்க சிரமப்பட்டனர். கடைசி பத்து ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்திக் கொண்டது. கலீல் அஹ்மது ரன்களை கட்டுப்படுத்த தவறினார்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

ஷமி ரன் கொடுப்பதில் சிறந்து விளங்கினாலும், விக்கெட் எடுக்கவில்லை. குல்தீப், புவனேஸ்வர் துவக்கத்தில் விக்கெட் வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்தினர். எனினும், கடைசி நேரத்தில் அவர்கள் பந்துகளில் கூடுதல் ரன்களை எடுத்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

பும்ரா ஓய்வு

பும்ரா ஓய்வு

அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பும்ரா அணியில் இருந்திருந்தால் இந்தியா தோல்வி அடைந்திருக்காது என பலரும் கூறினர். பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளித்துள்ளனர்.

பும்ரா இல்லாத அணி

பும்ரா இல்லாத அணி

கங்குலி பும்ரா குறித்து கூறுகையில், பும்ரா இல்லாமல் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என தெரிவித்தார். பும்ரா இல்லாத இந்திய அணியில் ஷமி, கலீல் அஹ்மது, புவனேஸ்வர் குமார், முஹம்மது சிராஜ் இருக்கின்றனர். எனினும், இந்திய பந்துவீச்சு சற்று பலவீனமாக தான் இருக்கிறது என குறிப்பிட்டார்.

பந்துவீச்சு பலவீனம் ஏன்?

பந்துவீச்சு பலவீனம் ஏன்?

ஷமி நல்ல பந்துவீச்சாளர் தான். ஆனால், அவர் ஒருநாள் போட்டிகளில் நீண்ட காலமாக ஆடாமல் இருந்து தற்போது தான் மீண்டும் களம் இறங்கி வருகிறார். புவனேஸ்வர் குமார் முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்கள் கொடுத்தார். இது இந்திய அணியின் சேஸிங்கில் அழுத்தம் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. கலீல் அஹ்மதும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

ஆதிக்கம் செலுத்துவார்களா?

ஆதிக்கம் செலுத்துவார்களா?

அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலாவது இந்திய அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்துமா? பும்ரா இல்லமாலும் தங்களால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என ஷமி, புவனேஸ்வர் நிரூபிப்பார்களா?

Story first published: Monday, January 14, 2019, 10:57 [IST]
Other articles published on Jan 14, 2019
English summary
India vs Australia : Ganguly says without Bumrah bowling attack is weak
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X