For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரன்னே எடுக்காத இவருக்கு ஏன் இத்தனை வாய்ப்பு? அந்த வாய்ப்பை யுவராஜ் சிங்கிற்கு கொடுக்கலாமே!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தொடர்ந்து ரன் குவிக்காமல் இருந்தும், அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி மற்றும் கோபமடைய வைத்துள்ளது. இவருக்கு அளிக்கும் வாய்ப்பை மற்ற வீரர்களுக்கு வழங்கலாமே என கூறி வருகின்றனர்.

விமர்சனம் எழுந்தது

விமர்சனம் எழுந்தது

ராகுல் கடந்த ஆண்டு முழுவதும் மிகச் சில போட்டிகள் தவிர பல போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். நிலையான ஆட்டம் என்பது அவரிடம் காணாமல் போய் விட்டது. இப்படிப்பட்ட வீரரை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டு வருகின்றனர்.

டெஸ்ட் அணியில் நீக்கம்

டெஸ்ட் அணியில் நீக்கம்

தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ராகுல் - முரளி விஜய் இணை சரியாக ரன் குவிக்கவில்லை. அதனால், இருவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

இது ஒரு புறம் நடக்கையில், மறுபுறம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ராகுல் இடம் பிடித்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராகுலுக்கு தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைத்து வரும் மர்மம் என்ன என கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், நான்கு இன்னிங்க்ஸ்களில் 48 ரன்கள் அடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஒருநாள் போட்டிகள் அணியில் களம் இறங்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து ரன் குவிக்கவில்லை என்பது தான். அப்படி இருந்தும் அவருக்கு ஏன் மீண்டும் அணியில் இடம் கொடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.

இடம் எப்படி?

ரசிகர்கள் ட்விட்டரில் ராகுல் தேர்வை கண்டு பொங்கி இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். "இத்தனை தோல்விகளுக்கு பின்னும் ராகுலுக்கு எப்படி இடம் கிடைக்கிறது?"

யுவராஜிற்கு வாய்ப்பு கொடுங்க

"தயவு செய்து ராகுலுக்கு வாய்ப்பு கொடுப்பதற்குப் பதில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கொடுங்கள்"

இன்னும் ஏன்?

"ராகுல் இன்னும் ஏன் அணியில் இருக்கிறார்?"

யாருக்கு மகிழ்ச்சியான செய்தி?

"ராகுல் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி"

Story first published: Tuesday, December 25, 2018, 18:06 [IST]
Other articles published on Dec 25, 2018
English summary
India vs Australia : KL Rahul get chance in ODI and T20 squad but fans are angry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X