For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா, மாயன்க் மீண்டும் அசத்தல் பேட்டிங்.. முன்னேறிய ரன் ரேட்.. ரன் குவிப்பில் இந்தியா

Recommended Video

கடைசி டெஸ்ட் போட்டியில் புஜாரா, மாயன்க் அசத்தல் பேட்டிங்- வீடியோ

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதல் நாள் முடிவில் புஜாரா சதம் அடித்து ஆடி வருகிறார். மாயன்க் அகர்வால் அரைசதம் அடித்தார். இந்தியா ஆதிக்கம் செலுத்தி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்டில் வெற்றி அல்லது டிரா பெற்றால் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில், நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ராகுல் மீண்டும் சொதப்பல்

ராகுல் மீண்டும் சொதப்பல்

இந்திய அணிக்கு ராகுல், மாயன்க் துவக்கம் அளித்தனர். ராகுல் எப்போதும் போல 6 பந்துகள் மட்டுமே சந்தித்து 9 ரன்கள் அடித்து நடையைக் கட்டினார். மாயன்க் பொறுப்பாக ஆடி மீண்டும் ஒரு அசத்தல் இன்னிங்க்ஸ் ஆடினார்.

மாயன்க் அரைசதம்

மாயன்க் அரைசதம்

மறுபுறம் புஜாரா தன் இயல்பான நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடித்து இருந்த மாயன்க் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

புஜாரா 18வது சதம்

புஜாரா 18வது சதம்

அடுத்து கோலி 23, ரஹானே 18 ரன்களில் வெளியேறினர். எனினும், புஜாரா நிலைத்து நின்று ஆடி தன் 18வது சதம் கடந்தார். இது தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் ஆகும்.

ரன் குவிப்பில் இந்தியா

ரன் குவிப்பில் இந்தியா

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 303 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்துள்ளது. ஹனுமா விஹாரி 39, புஜாரா 130 ரன்கள் அடித்து களத்தில் நிற்கின்றனர். முக்கிய விக்கெட்கள் உள்ளதால் இந்தியா இரண்டாம் நாளில் பெரிய அளவில் ரன் அடிக்க முற்படும். இந்தியா 450 முதல் 500 ரன்கள் வரை அடிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரன் ரேட் முன்னேற்றம்

ரன் ரேட் முன்னேற்றம்

முதல் மூன்று போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இந்த போட்டியில் இந்தியாவின் ரன் ரேட் 3.36 என அதிகமாக உள்ளது. மற்ற போட்டிகளில் இந்தியா பெரும்பாலும் மூன்றுக்கும் குறைவாகவே ரன் ரேட் வைத்து இருந்தது.

ரோஹித், இஷாந்த் இல்லை

ரோஹித், இஷாந்த் இல்லை

முன்னதாக இந்த டெஸ்டில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மாவுக்கு பதில் குல்தீப் யாதவ், ராகுல் சேர்க்கப்பட்டனர். ரோஹித் தனக்கு குழந்தை பிறந்ததை ஒட்டி இந்தியா விரைந்துள்ளார். இஷாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பும்ரா மற்றும் ஷமி மட்டுமே

பும்ரா மற்றும் ஷமி மட்டுமே

அஸ்வின் இந்த போட்டியில் சரியான உடற்தகுதி இல்லாத காரணத்தால் இடம் பெற முடியவில்லை. வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா மற்றும் ஷமி மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 3, 2019, 13:15 [IST]
Other articles published on Jan 3, 2019
English summary
India vs Australia : Pujara hit ton and Mayank hit half century in Sydney test. India dominates on Day 1.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X