For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன்யா இப்படி? தொடர் நாயகன் புஜாராவை “அவ்வா அவ்வா” டான்ஸ் ஆட வைத்த இந்திய வீரர்கள்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு காரணமாக இருந்தவர் புஜாரா. அவரை மற்ற இந்திய வீரர்கள் மொக்கையான டான்ஸ் ஸ்டெப் போட வைத்து, கலாய்த்து வேடிக்கை பார்த்தனர்.

டெஸ்ட் என்றால் புஜாரா

டெஸ்ட் என்றால் புஜாரா

புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே பிறந்தவர் என்றே நம் மனதில் இடம் பெற்று விட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமையை கடைப்பிடிக்கும் அவர் இயல்பிலும் அப்படியே இருக்கிறார். மற்ற இந்திய வீரர்கள் ஆட்டம் பாட்டம் என இருந்தாலும், புஜாரா எப்போதும் மிதமான உணர்ச்சிகளையே களத்திலும், களத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்துவார்.

வீரர்கள் உற்சாகம்

இந்தியா ஆஸ்திரேலிய அணியை முதன்முறையாக அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. அதனால் உற்சாகத்தின் உச்சியில் இருந்த இந்திய வீரர்கள் போட்டி டிரா என அறிவிக்கப்பட்ட உடன் அறையில் இருந்தே தங்கள் உற்சாகக் குரலை எழுப்பத் துவங்கினர்.

அவ்வா அவ்வா நடனம்

அடுத்து மைதானத்தில் வலம் வரத் துவங்கிய இந்திய வீரர்கள், தொடர் நாயகன் புஜாராவை கட்டம் கட்டினர். காலையில் ஜாகிங் போவது போன்ற ஒரு நடனத்தை அவரை ஆட வைத்து கலாய்த்தனர். அது பார்க்க நகைச்சுவை நடிகர் செந்தில் ஒரு படத்தில் ஆடும் அவ்வா அவ்வா நடனம் போலவே இருந்தது. கேப்டன் கோலியும் அந்த நடனத்தை ஆடி புஜாராவையும் ஆட வைக்க முயற்சித்தார்.

பச்சை மண் புஜாரா

பச்சை மண் புஜாரா

ஜடேஜா, பும்ரா போன்றோர் உலகில் இதுவரை பார்க்காத அதிசயத்தை பார்த்தது போன்று புஜாரா நடனம் ஆடுவதை எட்டிப் பார்த்து சிரித்தனர். ஒழுங்கா டெஸ்ட் பேட்டிங் ஆடுற அந்த பச்சை மண் புஜாராவை இப்படி ஓட்டுறீங்களே!

சிறந்த வீரர் புஜாரா

சிறந்த வீரர் புஜாரா

புஜாரா இந்த டெஸ்ட் தொடரில் 74 ரன்கள் சராசரியில், 7 இன்னிங்க்ஸ்களில் 521 ரன்கள் குவித்துள்ளார். சிட்னி டெஸ்டின் சிறந்த வீரர் விருதையும், டெஸ்ட் தொடரின் சிறந்த வீரர் விருதையும் சேர்த்து தட்டிச் சென்றார் புஜாரா.

Story first published: Monday, January 7, 2019, 11:36 [IST]
Other articles published on Jan 7, 2019
English summary
India vs Australia : Pujara learning dance step from teammates after historic series victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X