For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று கோலி.. அன்று கங்குலி.. ஆஸ்திரேலியாவின் ஏமாற்று வித்தைக்கு பலிகடாவான இந்திய வீரர்கள்

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி சர்ச்சைக்குரிய கேட்ச் மூலம் அவுட்டானார்.

ஆஸ்திரேலிய அணி பந்து சேத விவகாரத்திற்குப் பின் திருந்தி விட்டது என நினைத்து இருந்த நிலையில், மீண்டும் தன் ஏமாற்று வித்தைகளை காட்டி வருகிறது.

இது இந்திய அணிக்கு புதிதல்ல, இதற்கு முன் பல முறை ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச் ஆகி கேட்ச் பிடித்து விட்டு அவுட் கேட்டுள்ளனர்.

கோலி அவுட் சர்ச்சை

கோலி அவுட் சர்ச்சை

பெர்த் டெஸ்டில் கோலி சதம் அடித்து ஆடி வந்தார். அவர் 123 ரன்கள் அடித்து இருந்த போது பாட் கம்மின்ஸ் பந்தில் ஸ்லிப்பில் ஹாண்ட்ஸ்கோம்ப் கேட்ச் பிடித்ததாக அவுட் கொடுக்கப்பட்டார். இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் பிடித்து விட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்ட போது கள அம்பயர் மூன்றாவது அம்பயரின் முடிவை கேட்டார்.

ஏமாற்றமளித்த மூன்றாவது அம்பயர்

ஏமாற்றமளித்த மூன்றாவது அம்பயர்

ஹான்ட்ஸ்கோம்ப் பந்தை பிடிக்கும் அதே கணத்தில் பந்து தரையில் படுகிறது. அதற்கு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். கள அம்பயர் அவுட் கொடுத்து இருந்தால் கூட அவரால் சரியாக பார்க்க முடியவில்லை என விட்டு விடலாம். ஆனால், டிவியில் பல ரீப்ளேக்களை பார்த்து விட்டு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தது அதிர்ச்சியாக இருந்தது.

கங்குலிக்கு நடந்த கொடுமை

கங்குலிக்கு நடந்த கொடுமை

vகோலிக்கு முன் ஒருமுறை முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியை இதே போல வெளியேற்றினர் ஆஸ்திரேலிய வீரர்கள். 2008 சிட்னி டெஸ்டில் கங்குலி அடித்த பந்தை ஸ்லிப்பில் மைக்கேல் கிளார்க் கேட்ச் பிடித்தார், இந்த பந்தும் பிடிக்கும் போது தரையில் பட்டது. கங்குலி இது அவுட் இல்லை என நின்று கொண்டு இருந்தார். அப்போது அம்பயர் ஒரு அதிர்ச்சியான காரியம் செய்தார்.

பாண்டிங் கொடுத்த அவுட்

பாண்டிங் கொடுத்த அவுட்

அம்பயர் மார்க் பென்சன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங்கிடம் இது சரியான கேட்ச்சா என கேட்டார். பாண்டிங் சரியான கேட்ச். இது அவுட் என கையை உயர்த்திக் காட்டினார். உடனே அம்பயர் அவுட் கொடுத்தார். கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு அணியின் கேப்டனிடம் கேட்டு அவுட் கொடுத்தது இந்த சம்பவமாகத்தான் இருக்கும்.

ஏமாற்றப் பார்த்த பாண்டிங்

ஏமாற்றப் பார்த்த பாண்டிங்

அதே 2008 சிட்னி டெஸ்டில் தோனி அடித்த பந்தை தரையில் பட்டு பிடித்து விட்டு "கேட்ச் கேட்ச்" என பாண்டிங் அவுட் கேட்டார். நல்ல வேளையாக அதற்கு அவுட் கொடுக்கவில்லை அம்பயர். மூத்த வீரராக இருந்தும் இப்படி சீப்பாக நடந்து கொள்கிறாரே என அப்போது விவாதம் எழுந்தது.

ஆஸ்திரேலியா மாறாது

ஆஸ்திரேலியா மாறாது

பந்து சேத விவகாரத்திற்குப் பின் ஆஸ்திரேலிய அணி மாறும் எனப் பார்த்தால் இனியும் மாறாதோ என்று தான் தோன்றுகிறது. ஹாண்ட்ஸ்கோம்ப்-க்கு நிச்சயம் அது கேட்ச்சா இல்லையா என்ற சந்தேகம் இருந்திருக்கும். ஆனால், அதை மறைத்துக் கொண்டு கேட்ச் தான் என உறுதியாக அவுட் கேட்டது ஜென்டில்மேன் விளையாட்டுக்கு அழகல்ல.

Story first published: Monday, December 17, 2018, 11:36 [IST]
Other articles published on Dec 17, 2018
English summary
India vs Australia second test : This is not the first time an Indian captain dismissed by controversial catch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X