For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முரளி விஜய் - ராகுல் வீட்டுக்கு கிளம்ப நேரம் வந்தாச்சு.. எவ்ளோ வாய்ப்பு தான் கொடுக்குறது?

Ind vs Aus : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய துவக்க வீரர்கள் முரளி விஜய் - ராகுல் சொற்ப ரன்களுக்கு வெளியேறி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாம் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 326 ரன்கள் எடுத்துள்ளது.

மீண்டும் துவக்கம் மோசம்

மீண்டும் துவக்கம் மோசம்

அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு முரளி விஜய் - ராகுல் மீண்டும் மோசமான துவக்கம் அளித்துள்ளனர். முதல் டெஸ்டில் முரளி விஜய் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் இரண்டாம் இன்னிங்க்ஸில் 44 ரன்கள் எடுத்தார். எனினும், அவரது பார்ம் இன்னும் மோசமாகவே உள்ளது.

காயத்தால் கிடைத்த வாய்ப்பு

காயத்தால் கிடைத்த வாய்ப்பு

ப்ரித்வி ஷாவுக்கு பயிற்சிப் போட்டியில் காயம் ஏற்பட்டதால் முரளி விஜய் - ராகுல் இருவரும் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு பெற்றனர். ப்ரித்வி ஷா ஆடும் நிலையில் இருந்தால், இவர்கள் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கும்.

முரளி விஜய் போராட்டம்

முரளி விஜய் போராட்டம்

இப்படி கிடைத்த அரிய வாய்ப்பில் இருவரும் கோட்டை விட்டுள்ளனர். அதிலும் முரளி விஜய் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் பெரும் போராட்டத்திற்குப் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்றார்.

இனி வாய்ப்பு கிடைக்காது

இனி வாய்ப்பு கிடைக்காது

அப்போதும் கூட போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது. அப்படி கடினமான முறையில் வாய்ப்பு பெற்ற முரளி விஜய் தன் வாய்ப்பை வீணடித்துள்ளார். முரளி விஜய்க்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் மட்டுமே மீதமுள்ளது. அதில் தன்னை நிரூபிக்காவிட்டால், இனி டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது என்பது நடக்காத விஷயமாகவே இருக்கும்.

ராகுல் மோசம்

ராகுல் மோசம்

முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைப்பதே கடினமாக இருந்தது. ஆனால், ராகுல் அப்படி அல்ல. என்ன மாயமோ, மந்திரமோ, பார்ம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம் பிடித்து வரும் ராகுல், முதல் டெஸ்டில் இரண்டாம் இன்னிங்க்ஸில் 44 ரன்கள் அடித்தார். ஆனால், மீண்டும் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியுள்ளார். தான் ஒரு நம்பகமான பேட்ஸ்மேன் இல்லை என நிரூபித்து வருகிறார்.

ராகுலுக்கு ஏன் இத்தனை வாய்ப்பு?

ராகுலுக்கு ஏன் இத்தனை வாய்ப்பு?

கே எல் ராகுல் ஆடிய கடைசி 20 சர்வதேச போட்டிகளை எடுத்துப் பார்த்தால், மிக சில போட்டிகளிலேயே ரன் குவித்துள்ளார். பெரும்பாலும் 20 ரன்களுக்கு உள்ளேயே ஆட்டமிழந்துள்ளார். இவருக்கு மட்டும் அணியில் அப்படி என்ன சிறப்பு வாய்ப்பு என்பது மர்மமாகவே உள்ளது. எத்தனையோ வீரர்கள் ஒன்றிரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படும் நிலையில், ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

3வது டெஸ்டில் ப்ரித்வி ஆடுவாரா?

3வது டெஸ்டில் ப்ரித்வி ஆடுவாரா?

ப்ரித்வி ஷா 3வது டெஸ்ட்டில் ஆடும் பட்சத்தில், இவர்கள் இருவரில் ஒருவர் தங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும். அனேகமாக அது முரளி விஜய்யாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ப்ரித்வி ஷா 3வது ஆடுவாரா?

Story first published: Saturday, December 15, 2018, 12:55 [IST]
Other articles published on Dec 15, 2018
English summary
India vs Australia Second Test : Once again Murali vijay and Rahul failed to score
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X