சக்சஸான கோலி ப்ளான்.. 4வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

 
india vs england 2nd test match live cricket score updates lords

09:18 pm

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

09:18 pm

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றது.

08:24 pm

இங்கிலாந்து அணியில் 8வது விக்கெட்டும் சரிந்தது. 2வது செஷன் முடிவில் அந்த அணி 193 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை.

07:55 pm

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை உடைந்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கேப்டன் ஜோ ரூட் போல்டாகி வெளியேறினார்.

07:11 pm

இங்கிலாந்து அணியில் 6வது விக்கெட்டும் சரிந்தது. மொயின் அலியும் டக் அவுட்டாகி வெளியாகினார்.

07:11 pm

இங்கிலாந்து அணியை விழிப்பிதுங்க வைக்கும் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டரின் நம்பிக்கையாக இருந்த பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

06:45 pm

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது விக்கெட்டை எடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்து அணி 146 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.

06:26 pm

ஜடேஜா ஓவரில் 63 ரன்களில் போல்டான ஹஸீப் ஹமீத்

06:26 pm

லெக் ஸ்டெம்ப் லைனில் பிட்ச்சான பந்து, டர்ன் ஆகி ஆஃப் ஸ்டெம்ப்பை காலி பண்ண ஏமாற்றத்தோடு வெளியேறினார் ஹஸீப்

06:15 pm

உணவு இடைவேளை முடிந்து இங்கிலாந்து தற்போது பேட்டிங் செய்து வருகிறது

06:12 pm

இங்கிலாந்து கைவசம் 8 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், வெற்றிக்கு இன்னும் 237 ரன்கள் தேவைப்படுகிறது

06:12 pm

இரண்டாவது செஷனில் இந்தியா மேற்கொண்டு 2 விக்கெட் வீழ்த்தியாக வேண்டும்

06:12 pm

ஜோ ரூட்டை டார்கெட் செய்யாமல், மற்ற பேட்ஸ்மேன்களை குறி வைத்து காலி செய்வது புத்திசாலித்தனம் எனலாம்

05:37 pm

கடைசி நாளின் உணவு இடைவேளைக்கு முன்பு வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது

05:36 pm

இங்கிலாந்து வெற்றிப் பெற இன்னும் 237 ரன்கள் தேவை

05:11 pm

ரவீந்திர ஜடேஜா ஓவரில் ஹஸீப் ஹமீத் தொட்டுவிட்டு சிங்கிள் ஓட முயற்சிக்க, டேவிட் மலன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

05:11 pm

மாயங்க் அகர்வாலின் துல்லியமான த்ரோவை, லாவகமாக ரிஸீவ் செய்து ரன் அவுட் செய்தார் ரிஷப் பண்ட்

05:11 pm

இங்கிலாந்து இப்போது 120 / 2

05:07 pm

ரவீந்திர ஜடேஜா முடிந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசுகிறார் என்றே கூற வேண்டும்.

05:07 pm

தன்னால் முடிந்த வரை நன்றாகவே பந்து வீசி வருகிறார்

05:07 pm

அஷ்வின் மட்டும் இருந்திருந்தால், இங்கிலாந்தை இன்று ஒரு வழி செய்திருக்கலாம்

04:43 pm

ஜடேஜா ஓவரில் ஹஸீப் ஹமீத் கொடுத்த கேட்சை தவறவிட்ட முகமது சிராஜ்

04:43 pm

55 ரன்களில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஹமீத்

04:37 pm

46 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது

04:37 pm

ஹஸீப் ஹமீத் 54 ரன்களுடனும், டேவிட் மலன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

04:15 pm

இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஹஸீப் ஹமீத் 123 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

04:15 pm

இத்தொடரில் இது அவருக்கு 2வது அரைசதமாகும்

04:13 pm

124 பந்துகளில் அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ், அடுத்த பந்திலேயே ஷர்துல் தாகூர் ஓவரில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

04:12 pm

இங்கிலாந்து 40 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்துள்ளது

04:12 pm

இன்று 5ம் நாள் ஆட்டத்திலும், இங்கிலாந்து ஓப்பனர்கள் எந்தவித பிரஷரும் இன்றி கேஷுவலாக விளையாடி வருகின்றனர்

03:40 pm

ஆஃப் ஸ்டெம்ப்பை குறிவைக்கும் இந்தியன் பவுலர்ஸ்

03:40 pm

பும்ராவுக்கு இந்த செஷனில் விக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது

03:40 pm

தொடக்க வீரர்களை வீழ்த்த தொடரும் போராட்டம்

03:38 pm

5ம் நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் தான் மிக முக்கியமானது

03:37 pm

லன்ச்சுக்கு முன்பாக எப்படியும் 2 விக்கெட்டுகளாவது இந்திய அணி வீழ்த்த வேண்டும்

03:37 pm

அப்போது தான் வெற்றி என்பதைப் பற்றி இந்தியா யோசித்துப் பார்க்க முடியும்

03:30 pm

இந்தியா - இங்கிலாந்து 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது

03:30 pm

இங்கிலாந்து நேற்று நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது

03:30 pm

இங்கிலாந்து வெற்றிப் பெற இன்னும் 291 ரன்கள் தேவை

09:26 pm

இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது

09:25 pm

இந்நிலையில், ரோஹித்தின் இடது முழங்காலில் அசௌகரியம் இருப்பதாலும், புஜாராவின் இடது கணுக்காலில் வலி உள்ளதாலும் இருவரும் ஃபீல்டிங் செய்ய மாட்டார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

09:07 pm

இந்தியா நிர்ணயித்துள்ள 368 ரன்கள் இலக்கை நோக்கி, இங்கிலாந்து 2ம் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது

08:56 pm

இந்தியா 2வது இன்னிங்ஸில் 466 ரன்களுக்கு ஆல் அவுட்

08:55 pm

கடைசி விக்கெட்டாக உமேஷ் யாதவ் 25 ரன்களில் அவுட்டானார்.

08:55 pm

இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு

08:42 pm

இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்துள்ளது

08:42 pm

இதன் மூலம், இங்கிலாந்தை விட 351 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

08:22 pm

தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 445 ரன்கள் எடுத்துள்ளது

08:09 pm

இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 440 ரன்கள் எடுத்துள்ளது

08:09 pm

இங்கிலாந்தை விட 340 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது

07:51 pm

இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்துள்ளார் ரிஷப் பண்ட்

07:51 pm

105 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரிஷப், மொயீன் அலி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்

07:46 pm

ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் 153 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது

07:46 pm

கேப்டன் ஜோ ரூட் ஓவரில், 60 ரன்களில் ஷர்துல் தாகூர் வெளியேறினார்

07:35 pm

முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்த நிலையில், இரண்டாம் இன்னிங்ஸிலும் 65 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் ஷர்துல்.

07:35 pm

ரிஷப் பண்ட் 43 ரன்களுடன் களத்தில் இருக்க, இந்தியா 300 ரன்கள் முன்னிலை பெற்றது.

07:35 pm

இந்திய அணியும் 400 ரன்களை கடந்தது

07:19 pm

இந்திய அணி 131 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்துள்ளது

07:19 pm

ஷர்துல் தாகூர் 36 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

06:57 pm

இந்திய அணி 127 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்துள்ளது

06:57 pm

ஷர்துல் தாகூர் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

06:45 pm

விராட் கோலி அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் 80 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்

06:35 pm

இந்திய அணி 250 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

06:27 pm

உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியுள்ளது

06:27 pm

ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் களத்தில் உள்ளனர்.

06:27 pm

இந்தியா 245 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

06:27 pm

கைவசம் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில், இந்தியா 300 ரன்கள் முன்னிலை பெறுமா?

05:07 pm

இந்தியாவின் நம்பிக்கை உடைந்தது. சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

05:00 pm

5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை கடந்தது இந்திய அணி. கேப்டன் கோலி 44 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

04:32 pm

4வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்த இந்திய அணி. 5வது விக்கெட்டும் சரிந்தது. துணைக் கேப்டன் ரகானே டக் அவுட்டாகி வெளியேறினார்.

04:25 pm

இந்திய அணியில் 4வது விக்கெட் சரிந்தது. ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டானார்.

03:36 pm

கேப்டன் விராட் கோலி 23 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

03:33 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது நேற்று (செப்.4) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது

10:43 pm

மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக அரைமணி நேரம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

10:21 pm

போதிய வெளிச்சம் இல்லாததால், ஆட்டம் பாதியில் நிறுத்தம் இந்திய அணி 92 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

09:48 pm

புஜாரா அவுட்டான பிறகு, மீண்டும் 5வது வீரராக ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார் இந்திய அணி 87 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் விராட் கோலி மற்றும் ஜடேஜா களத்தில் உள்ளனர்

09:23 pm

ஓலே ராபின்சன் ஓவரில் புஜாரா 61 ரன்களில் கேட்ச் ஆகி அவுட்டானார் ரோஹித் ஷர்மா அவுட்டான அடுத்த ஓவரிலேயே, புஜாராவும் அவுட்டாக, இந்தியா மீண்டும் இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளது

09:18 pm

ரோஹித் ஷர்மா - புஜாரா கூட்டணி ரோஹித் ஷர்மா 127 ரன்களில் கிரெய்க் ஓவர்டன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார் இந்தியா தனது 2வது விக்கெட்டை இழந்துள்ளது

08:57 pm

முதன் முறையாக இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீசி வருகிறார் இந்தியாவின் 2வது விக்கெட்டை வீழ்த்த, இங்கிலாந்து கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது

08:46 pm

இங்கிலாந்துக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து புஜாரா அசத்தல்

08:46 pm

தேநீர் இடைவேளை முடிந்து இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது இங்கிலாந்து பவுலர் கிரெய்க் ஓவர்டன் புஜாராவிடம் அவ்வப்பொழுது வார்த்தைகளால் வம்பிழுத்து வருவது போட்டிக் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

08:22 pm

மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை, இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 103 ரன்களுடனும், புஜாரா 48 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

07:52 pm

மெகா சிக்ஸர் மூலம் தனது வெளிநாட்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா

07:50 pm

ரோஹித் - புஜாரா பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது ரோஹித் ஷர்மா 90-களைத் தாண்டி சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்

07:39 pm

கால்களை சிறப்பாக நகர்த்தி ரோஹித் ஷர்மா அருமையாக விளையாடி வருகிறார்

07:13 pm

இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் இந்தியா 54 ரன்கள் முன்னிலை

07:13 pm

இங்கிலாந்து இப்போது தான் சரியான முடிவுக்கு வந்துள்ளது அதாவது, பிட்ச் இப்போது ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் நிலையில், ரோஹித் - புஜாரா பார்ட்னர்ஷிப்புக்கு தொடர்ச்சியாக பந்து வீச மொயீன் அலிக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் கேப்டன் ரூட் இந்த நேரத்தில், "ஸ்பின் ஈஸ் கிங்" என்பதை புரிந்து கொண்டார் போல

06:56 pm

உணவு இடைவேளைக்கு பிறகு பந்துவீச மொயீன் அலிக்கு அழைப்பு ரோஹித்தை கட்டம் கட்டித் தூக்க திட்டம் ரோஹித்தை இறங்கி வந்து ஆடச் செய்து அவுட்டாக்க வியூகம்

06:55 pm

ரோஹித் - புஜாரா 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்துள்ளனர்

06:41 pm

ரோஹித் ஷர்மா அரைசதம் டெஸ்ட் போட்டிகளில் தனது 15வது அரைசதம் அடித்துள்ளார் ரோஹித் ஷர்மா இந்தியா 47 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது

06:20 pm

உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணி பேட்டிங்கை துவங்கியுள்ளது இந்திய அணி இப்போது வரை 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்துள்ளது. 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது மேற்கொண்டு 200 ரன்கள் அடித்தால், நிச்சயம் வெற்றிக்கு பாடுபடலாம்.

05:37 pm

மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

05:31 pm

2வது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது இந்தியா 2வது இன்னிங்ஸில் தற்போது இங்கிலாந்தை விட முன்னிலைப் பெற்றுள்ளது ரோஹித் 47 ரன்களுடனும், புஜாரா 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்

05:23 pm

இந்தியா 39 ஓவர்கள் முடிவில் 98 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 42 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

05:05 pm

முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல், 46 ரன்களில் ஆண்டர்சன் ஓவரில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்தியா 35 ஓவர்கள் முடிவில் 83-1

04:31 pm

இந்தியா 28 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது

04:31 pm

இந்தியா 28 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 3 கண்டங்களில் இருந்து தப்பித்து விளையாடி வருகிறது

04:31 pm

இந்தியா 28 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 3 கண்டங்களில் இருந்து தப்பித்து விளையாடி வருகிறது

04:31 pm

இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 3 கண்டங்களில் இருந்து தப்பித்து விளையாடி வருகிறது

03:47 pm

விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எட்டியது இந்திய அணி. ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்

03:03 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 4வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

03:03 pm

2வது இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

11:07 pm

2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 20 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்தை விட 56 ரன்கள் பின்தங்கியுள்ளது2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 20 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்தை விட 56 ரன்கள் பின்தங்கியுள்ளது

10:53 pm

13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் 18 ரன்களுடனும், ராகுல் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

10:32 pm

இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது

09:59 pm

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ள நிலையில், இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இந்தியாவை விட இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

09:44 pm

அரைசதம் விளாசினார் க்றிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

09:41 pm

கடைசி விக்கெட்டை எடுக்க போராடும் இந்தியா இங்கிலாந்து கிட்டத்தட்ட 100 ரன்கள் முன்னிலையை நெருங்கிவிட்டது.

09:24 pm

ஓலே ராபின்சன் 5 ரன்களில் ஜடேஜா ஓவரில் போல்டாக இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது

09:03 pm

இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்த ஓலே போப் 81 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாகூர் ஓவரில் போல்டானார்

08:48 pm

இங்கிலாந்து தற்போது இந்தியாவை விட 50 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

08:36 pm

தேநீர் இடைவேளை முடிந்து, இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது

08:02 pm

ஜடேஜா ஓவரில் மொயீன் அலி 35 ரன்கள் எடுத்து வெளியேறினார் இங்கிலாந்து 7வது விக்கெட்டை இழந்தது. 222-7

08:01 pm

67 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது ஓலே போப் 70 ரன்கள் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்

07:43 pm

முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட முன்னிலை பெற்றது இங்கிலாந்து

07:43 pm

ஓலே போல் அரைசதம் அடித்து அசத்த, இங்கிலாந்து அணி இந்தியா அடித்த 191 ரன்களை கடந்துள்ளது

07:43 pm

ஓலே போப் 64 ரன்களுடனும், மொயீன் அலி 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

06:58 pm

இங்கிலாந்தின் ஓலே போப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்திருக்கிறார்

06:58 pm

இங்கிலாந்து 53 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது

06:34 pm

முகமது சிராஜ் ஓவரில், ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்

06:34 pm

இங்கிலாந்தை சுருட்ட கிடைத்த அற்புதமான வாய்ப்பை இந்தியா தவற விட்டுள்ளது எனலாம்

06:34 pm

ஓலே போப் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

06:34 pm

62 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, இப்போது 150 ரன்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது

05:46 pm

77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒல்லி போப் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி. உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்துள்ளது.

04:55 pm

பார்ட்னர்ஷிப் அமைக்க போராடும் இங்கிலாந்து அணி. 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 15 ரன்களுடனும், பேர்ஸ்டோ 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

04:54 pm

திடீரென அதிரடி காட்டும் இங்கிலாந்து அணி. 5 விக்கெட்கள் இழப்புடன் 100 ரன்களை கடந்தது.

04:10 pm

கெத்து காட்டும் உமேஷ் யாதவ். இங்கிலாந்து அணியில் 5வது விக்கெட் சரிந்தது.

04:10 pm

உமேஷ் யாதவ் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தில் நட்சத்திர வீரர் டேவிட் மாலன் கேட்ச்சாகி வெளியேறினார்.

03:40 pm

2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கமே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி. உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில் இங்கிலாந்து வீரர் க்ரெய்க் ஓவர்டன் அவுட்டானார். அவுட் ஸ்விங்காக போடப்பட்ட பந்தை அடிக்க முயன்று எட்ஜாகியதால், ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

03:40 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது.

03:11 pm

வலுவான நிலையில் இந்திய அணி.. இன்று தொடங்குகிறது 2வது நாள் ஆட்டம்!

03:11 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

11:14 pm

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது

10:57 pm

பார்க்கவே கண்கொள்ளா காட்சி இது என்று கூறலாம் வரிசையாக மூன்று சதங்களை அடுக்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பைல்ஸ் பறக்க உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி வெளியேறினார் அவர் 21 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து 3வது விக்கெட்டை இழந்தது

10:46 pm

இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது 2 விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விழுந்தாலும், ஜோ ரூட் - டேவிட் மலன் கூட்டணி சிறப்பாக விளையாடி வருகிறது

10:30 pm

இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பின்னரும், வழக்கம் போல் எந்தவித பதட்டமும் இன்றி கேஷுவலாக அடிக்க ஆரம்பித்துவிட்டார் ஜோ ரூட் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது

10:04 pm

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து ரோரி பர்ன்ஸ் 5 ரன்களில் போல்டான நிலையில், மற்றொரு தொடக்க வீரர் ஹஸீப் ஹமீத் ரன் ஏதும் எடுக்காமல் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார்

10:00 pm

பும்ரா ஓவரில் ரோரி பர்ன்ஸ் அவுட் பும்ரா பந்தில் இன்சைட் எட்ஜ் ஆன பர்ன்ஸ், 5 ரன்களில் போல்டாகி வெளியேறினார்

09:46 pm

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து தற்போது களமிறங்கியுள்ளது. ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்

09:41 pm

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது

09:41 pm

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும், கேப்டன் கோலி விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்

09:30 pm

பும்ரா ரன் ஏதும் எடுக்காமல், ரோரி பர்ன்ஸ் மூலம் ரன் அவுட் ஆக்கப்பட்டு வெளியேறினார். இந்தியா 190-9

09:29 pm

இங்கிலாந்தை கடைசி நேரத்தில் கதிகலங்க வைத்த ஷர்துல் தாகூர் 57 ரன்களில், க்றிஸ் வோக்ஸ் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்

09:23 pm

ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் 53 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார் ஷர்துல் - உமேஷ் கூட்டணி 8வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

09:17 pm

சிக்ஸர்களாக விளாசும் ஷர்துல் தாகூர் துவண்டு கிடந்த இந்திய அணியில், புதிய வெளிச்சம் பாய்ச்சும் விதமாக, ஷர்துல் தாகூர் சிக்ஸர், பவுண்டரி என்று அதகளம் புரிந்து வருகிறார்.

09:03 pm

க்றிஸ் வோக்ஸ் பந்துவீச்சில், வெறும் 9 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரிஷப் பண்ட் இந்திய அணி தனது 7வது விக்கெட்டை இழந்துள்ளது

08:22 pm

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் டீ பிரேக் வரை, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து தள்ளாடி வருகிறது. ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்

08:09 pm

கிரெய்க் ஓவர்டன் ஓவரில், 14 ரன்களில் ரஹானே அவுட் சைட் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி தனது 6வது விக்கெட்டை பறிகொடுத்துள்ளது இந்திய அணி 117 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது

07:55 pm

இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது ரஹானே 7 ரன்களுடனும், ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்

07:29 pm

கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தல் 85 பந்துகளை சந்தித்த விராட் கோலி, தனது 27வது டெஸ்ட் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்

07:08 pm

இந்த டெஸ்ட் தொடரில், விராட் கோலி உண்மையிலேயே கிங் கோலியாக விளையாடுவது இந்த இன்னிங்ஸில் தான். தற்போது 45 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

07:08 pm

விராட் கோலி அரைசதம் கடந்து சதம் அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

06:54 pm

க்றிஸ் வோக்ஸ் ஓவரில், ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் இருந்த போது, ஒரு அபார பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது.

06:54 pm

ஆனால், ரஹானே சந்தேகத்துடன் ரிவ்யூ செல்ல, ஸ்டெம்புகளுக்கு மேலே பைல்ஸை உரசிக் கொண்டு செல்வது போல் இருந்தது. இதனால், அவுட் கண்டத்தில் இருந்து ரஹானே தப்பித்தார்

06:37 pm

க்றிஸ் வோக்ஸ் ஓவரில், ஜடேஜா 11 ரன்களில் அவுட்

06:37 pm

வோக்ஸின் அபார லைன் அன்ட் லெந்த் பந்தில் எட்ஜ் ஆன ஜடேஜா, கேப்டன் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

06:25 pm

வோக்ஸ் ஓவரில், 22 ரன்கள் எடுத்திருந்த போது கோலி கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்றிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தவறவிட்டார்

06:21 pm

முதல் நாள் ஆட்டத்தின் 2வது செஷன் ஆட்டம் தொடங்கியது. கேப்டன் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சி

05:59 pm

25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி 18ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் பொறுப்பான ஆட்டம்.

05:13 pm

இந்திய அணியில் 3வது விக்கெட்டும் சரிந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய புஜாரா இந்த போட்டியில் 4 ரன்களுக்கு வெளியேறினார்.

04:50 pm

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி. 2வது விக்கெட்டும் சரிந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கு ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

04:40 pm
Mykhel

இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது. நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

04:10 pm

இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம். 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 11 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

03:38 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

03:38 pm

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

03:38 pm

4வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

03:09 pm

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

05:18 pm

இந்தியா 2வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்

05:18 pm

இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

05:18 pm

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமமாகியுள்ளது

05:13 pm

கிரெய்க் ஓவர்டன் ஓவரில் ரவீந்திர ஜடேஜா 30 ரன்களில் வெளியேறினார்

05:02 pm

ஓலே ராபின்சன் ஓவரில் இஷாந்த் ஷர்மா 2 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார்

05:02 pm

இந்திய அணி தனது 8வது விக்கெட்டை இழந்தது

05:02 pm

இந்த இன்னிங்ஸில் ராபின்சன் கைப்பற்றிய 5வது விக்கெட் இதுவாகும்

04:52 pm

மொயீன் அலி ஓவரில் முகமது ஷமி 6 ரன்களில் அவுட்

04:52 pm

இந்தியா 7வது விக்கெட்டை இழந்தது

04:52 pm

4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

04:37 pm

ஓலே ராபின்சன் ஓவரில் ரிஷப் பண்ட் அவுட்

04:37 pm

7 பந்துகளை சந்தித்த பண்ட் வெறும் 1 ரன் மட்டும் எடுத்து கேட்ச் ஆனார்

04:37 pm

இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இந்தியா வலிமையாக நகர்ந்து வருகிறது

04:31 pm

ஆண்டர்சன் ஓவரில் அஜின்க்யா ரஹானே 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

04:31 pm

இந்திய அணி தனது 5வது விக்கெட்டை இழந்தது

04:21 pm

ஓலே ராபின்சன் ஓவரில் விராட் கோலி அவுட்

04:21 pm

அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே, விராட் கோலி 55 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

04:18 pm

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்த விராட் கோலி

04:18 pm

இது அவரது 26வது டெஸ்ட் அரைசதமாகும்

04:15 pm

விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட் கொடுக்கப்பட்டது

04:15 pm

விராட் கோலியும் உடனே வெளியேற தயாராகிவிட்டார். அதன் பிறகு, ஒரு நொடி யோசித்த கோலி, ரஹானேவிடம் இதைப் பற்றி கேட்க, ரஹானே ரிவ்யூ எடுக்க அறிவுறுத்தினார்.

04:14 pm

ரிவ்யூவில், கோலியின் பேட் அவரது பேடில் உரசியதால் அந்த சப்தம் கேட்டது தெரிய வந்தது. ரஹானேவின் ஆலோசனை கோலியின் விக்கெட்டை தக்க நேரத்தில் காப்பாற்றியது.

04:09 pm

விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட் கொடுக்கப்பட்டது

04:09 pm

ஆண்டர்சனின் பந்து கோலி பேட்டை உரசிச் சென்றது போல தெரிந்ததால் அம்பயர் அவுட் கொடுத்தார்

04:09 pm

ஆனால், கோலி ரிவ்யூ கேட்க, பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது

03:53 pm

ஓலே ராபின்சன் ஓவரில், புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் 91 ரன்களில் வெளியேறினார்.

03:53 pm

இந்தியா தனது 3வது விக்கெட்டை இழந்துள்ளது.

03:29 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் தொடக்கம்

03:29 pm

நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது

03:29 pm

புஜாரா 91 ரன்களுடனும், கேப்டன் கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

10:54 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

10:54 pm

2வது இன்னிங்ஸில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி 45 ரன்களுடனும், புஜாரா 91 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

10:53 pm

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்ய இன்னும் 139 ரன்கள் தேவை.

10:46 pm

80 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 45 ரன்களுடனும், சட்டீஸ்வர் புஜாரா 91 ரன்களுடனும் சிறப்பான பார்ட்னர்ஷிப்

09:38 pm

60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. சட்டீஸ்வர் புஜாரா 71 ரன்களும் விராட் கோலி 15 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டம்.

08:42 pm

இந்திய அணியில் 2வது விக்கெட் வீழ்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா, 59 ரன்களுக்கு ஒல்லி ராபின்சன் வீசிய பந்தில் எல்.பி.டபள்யூ ஆனார்.

08:28 pm

46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 59 ரன்களுடனும், புஜாரா 40 ரன்களுடனும் சிறப்பான ஆட்டம்.

07:45 pm

இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரைசதம் அடித்தார்.

07:07 pm

30 ஓவர்கள் முடீவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 39 ரன்களுடனும், புஜாரா 22 ரன்களுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

05:49 pm

இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம்.

05:49 pm

2வது இன்னிங்ஸில் இந்திய அணி 34 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தடுமாற்றம்.

04:54 pm

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 10 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 6 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

03:53 pm

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட்121 ரன்கள் அடித்து அசத்தல்.

03:46 pm

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது..

03:40 pm

இந்தியா - இங்கிலாந்து 3வது நாள் ஆட்டம் தொடங்கியது கிரெய்க் ஓவர்டன் மற்றும் ஓலே ராபின்சன் களத்தில் உள்ளனர்

03:06 pm

ஹெட்டிங்லேவில் நடந்து வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது.

03:06 pm

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

03:06 pm

இந்தியா முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

11:12 pm

2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 423 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

11:12 pm

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை.

10:39 pm

இங்கிலாந்து அணியின் விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்தனர் இந்திய பவுலர்கள். 403 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 325 ரன்கள் முன்னிலை.

09:53 pm

இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார் முகமது ஷமி. பேர்ஸ்டோ 29 ரன்களுக்கும், பட்லர் 7 ரன்களுக்கு வெளியேறினர்.

09:26 pm

மீண்டும் சதமடித்து அசத்தினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்துள்ளது.

08:31 pm

இங்கிலாந்து அணியில் ஒருவழியாக 3வது விக்கெட் வீழ்ந்தது. சிறப்பாக ஆடி வந்த டேவிட் மாலனை வெளியேற்றினார் முகமது சிராஜ்.

08:30 pm

தேனீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 220 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

07:49 pm

இந்திய அணியை விட 200 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.

07:49 pm

கேப்டன் ஜோ ரூட் 68 ரன்களும், டேவிட் மாலன் 62 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டம்.

06:57 pm

80 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 226 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மாலன் 36 ரன்களும், ஜோ ரூட் 45 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப்

06:13 pm

ரூட்டின் விக்கெட்டை எடுக்க ஓய்வறையில் ஆலோசனை நடத்தும் விராட் கோலி. இங்கிலாந்தின் வியூகத்தை உடைக்க திட்டம்.

05:39 pm

உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது

05:39 pm

டேவிட் மலன் 24 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

05:39 pm

ரோரி பர்ன்ஸ் 61 ரன்களிலும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களிலும் அவுட்டானார்கள்