For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். உடன் இறுதியில் மோத போகும் அணி எது? இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்.. பிளேயிங் லெவனில் மாற்றம்

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 22 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 12 முறையும், இங்கிலாந்து அணியும் 10 முறையும் மோதியுள்ளன.

அடிலெய்ட் மைதானம், இந்திய ஆடுகளங்கள் போல் செயல்பட வாய்ப்பு இருப்பதால், இந்தியாவுக்கு இந்த ஆட்டத்தில் கூடுதல் சாதகம் உள்ளது.

டி20 உலககோப்பை - இங்கிலாந்துடன் மோதி 10 வருசம் ஆச்சா? கடைசியாக நடந்த போது என்ன ஆச்சு தெரியுமா?டி20 உலககோப்பை - இங்கிலாந்துடன் மோதி 10 வருசம் ஆச்சா? கடைசியாக நடந்த போது என்ன ஆச்சு தெரியுமா?

ஆடுகளம்

ஆடுகளம்

இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அடிலெய்ட் ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீச முடியும். அதே சமயம், இங்கிலாந்திலும் ஆதில் ரஷித் மற்றும் மொயின் அலி என இரண்டு தலைச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் , அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இங்கிலாந்த வீரர்கள் லேக் ஸ்ப்பினரை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். இதனால் இன்றைய ஆட்டத்தில் அக்சர் பட்டேலுக்கு பதில் சாஹல் அணியில் வர வாய்ப்பு இருக்கிறது,

பேட்டிங் குறை

பேட்டிங் குறை

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை முக்கிய ஆட்டத்தில் ராகுல் காலை வாருவதை தொடர் கதையாக வைத்திருக்கிறார். இதனால், ராகுல் ஹாட்ரிக் அரைசதம் அடித்தால் மட்டுமே ஒரு அளவுக்கு இந்தியாவால் பதிலடி தர முடியம். இதே போல் ரோகித் சர்மா, நெதர்லாந்து ஆட்டத்தை தவிர்த்து பெரிதாக ஏதும் அடிக்கவில்லை. இதனால் ரோகித் ஆட்டமும் இன்று முக்கியத்துவம் வாய்ந்தததாக இருக்கும்.

பந்துவீச்சாளர்கள் பொறுப்பு

பந்துவீச்சாளர்கள் பொறுப்பு

இங்கிலாந்து வீரர்களை பொறுத்தவரையில் பேட்டிற்கு பந்து நன்றாக வந்தால் அடித்து நொறுக்குவார்கள். இதனால் அவர்களுக்கு நெருக்கடி தர ஸ்லோ பந்துகளை இந்திய பவுலர்கள் அதிகம் வீச வேண்டும். முகமது ஷமி, ஆர்ஸ்தீப் , ஹர்திக் ஆகியோர் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும். அஸ்வின்தனது மாயஜால பந்துவீச்சை வெளி கொண்டால் மட்டுமே இங்கிலாந்து வீரர்களை தடுக்க முடியும்.

இந்தியா பிளேயிங் அணி

இந்தியா பிளேயிங் அணி

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், சாஹல் / அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஆர்ஸ்தீப் சிங், முகமது ஷமி

நேரலை - ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், வானிலை - மழை இல்லை

Story first published: Thursday, November 10, 2022, 7:20 [IST]
Other articles published on Nov 10, 2022
English summary
India vs England Locks Horns in Todays semi final in icc t20 world cup பாக். உடன் இறுதியில் மோத போகும் அணி எது? இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்.. பிளேயிங் வெலனில் மாற்றம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X