For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த இரண்டே விஷயம் போதும்.. ஜோ ரூட்டை சுலபமாக வீழ்த்தலாம்.. கோலிக்கு மாண்டி பனேசர் டிப்ஸ்!

லார்ட்ஸ்: இந்திய அணிக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் ஜோ ரூட்டின் விக்கெட்டை விரைவாக எப்படி எடுப்பது என முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

Recommended Video

Joe Root Admits To Tactical Blunders, Says Underestimated India's Lower-Order

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று கைநழுவ விட்ட இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது.

லண்டன் நகரத்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9வது விக்கெட்டிற்கு 77 ரன் பார்ட்னர்ஷிப்.. இங்கிலாந்தை மிரட்டிய பும்ரா - ஷமி.. விழிப்பிதுங்கிய ரூட்!9வது விக்கெட்டிற்கு 77 ரன் பார்ட்னர்ஷிப்.. இங்கிலாந்தை மிரட்டிய பும்ரா - ஷமி.. விழிப்பிதுங்கிய ரூட்!

இந்தியாவின் ஒரே சிக்கல்

இந்தியாவின் ஒரே சிக்கல்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் சரி, 2வது டெஸ்ட் போட்டியிலும் சரி, இந்திய அணி சுலபமாக வென்றிருக்க வேண்டியது. இங்கிலாந்து அணியை சொற்ப ரன்களுக்குள் சுருட்டி இருக்கும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட். அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் வெளியேறிய போது, ரூட் மட்டும் ஒற்றை ஆளாக போராடி, 2 போட்டிகளிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்தார்.

ஜோ ரூட் ரன் வேட்டை

ஜோ ரூட் ரன் வேட்டை

இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 4 இன்னிங்ஸ்களை சேர்த்து இதுவரை ஜோ ரூட் 386 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்களும், ஒரு அரை சதமும் அடங்கும். இதன் மூலம் இந்த தொடரில் அவரின் சராசரி ரன் ரேட் 128.66 ஆக உள்ளது. குறிப்பாக 2வது டெஸ்ட் போட்டியில் அவர் ஒருவரால் தான் இந்தியாவுக்கு பெரும் தலைவலியே.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால் ஜோ ரூட் ஒருவர் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 180 ரன்களை எடுத்தார். அதுவும் நாட் அவுட். 2வது இன்னிங்ஸிலும் அவர் சிறப்பாக விளையாடி 40 ரன்களை எடுத்தார். அடித்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் தான் விரைவாக அவுட்டானார். இல்லையென்றால் அதிலும் ஒரு அரைசதம் வந்திருக்கும்.

மாண்டி பனேசர் அட்வைஸ்

மாண்டி பனேசர் அட்வைஸ்

இந்நிலையில் ஜோ ரூட்டின் விக்கெட்டை எப்படி விரைந்து எடுப்பது என இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மாண்டி பனேசர் அட்வைஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஜோ ரூட்டை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்றால் 5வது ஸ்டம்ப் லைன் மற்றும் ஆஃப் ஸ்டம்ப் திசையில் பந்துவீச வேண்டும். 2வது இன்னிங்ஸில் கோலி மற்றும் பும்ரா அதனை நன்றாக செய்ததனால் தான் விக்கெட் கிடைத்தது. அதே போலவே 3வது டெஸ்டுக்கும் கோலி திட்டமிட வேண்டும். ஜோ ரூட்டிற்கு புல் ஷாட்டை சமாளிப்பது மிகவும் எளிது. நன்றாக விளையாடுவார். எனவே அவருக்கு ஷார் பிட்ச் பந்துகளை வீசாமல் முடிந்தவரை 5வது ஸ்டம்ப் லைனிலேயே பந்து வீச வேண்டும்.

 அந்த ஒரு வீரர்

அந்த ஒரு வீரர்

ஜோ ரூட் களத்திற்கு வந்துவிட்டால், முடிந்த அளவிற்கு உடனடியாக பும்ராவை பந்துவீச அழைக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தை கொடுத்து, அவர்களை தவறு செய்ய வைத்தப்பிற்கு விக்கெட் எடுக்கும் திறமை பும்ரா மற்றும் சிராஜுக்கு உள்ளது. எனவே அவர்கள் இருவருமே ரூட்டிற்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள்.

பேட்டிங் பொஷிஷன்

பேட்டிங் பொஷிஷன்

ரூட்டை முதலில் பதற்றப்படவைக்க வேண்டும். அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசினால், தனது பேட்டிங் பொஷிஷன் மற்றும் ஆட்ட திட்டத்தை மாற்றுவார். அதன் பிறகு சுலபமாக ரூட்டின் விக்கெட்டை எடுத்து விடலாம். இப்படி தான் மிக விரைவாக ரூட்டின் விக்கெட்டை எடுக்க முடியும் என மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 18, 2021, 18:29 [IST]
Other articles published on Aug 18, 2021
English summary
Former Cricketer Monty Panesar gives tips of how India to get England skipper root's wicket earlier
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X