For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை மோதல்களில் அதிக வெற்றி பெற்றது யார்? இந்தியாவா? பாகிஸ்தானா?

india vs pakistan in Asia cup matches so far

துபாய் : ஆசிய கோப்பை போட்டிகளின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று மோதவிருக்கின்றன.

இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் மோதியுள்ள விவரங்கள் இதோ:

இதுவரை இந்தியா,பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிகளில் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆறு போட்டிகளில் இந்திய அணியும் நான்கு போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

ஆசிய கோப்பை (1984):

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் முதல் முறையாக பாகிஸ்தானை 1984ஆம் ஆண்டு சந்தித்தது. அந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

ஆசிய கோப்பை (1988):

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது. அந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

ஆசிய கோப்பை (1995):

ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆசிய கோப்பை (1997):

மழையின் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

ஆசிய கோப்பை (2000):

பாகிஸ்தான் அணி இந்திய அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆசிய கோப்பை (2004):

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த தொடரில் இந்திய அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

ஆசிய கோப்பை (2008):

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய,பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதின..

குரூப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

ஆசிய கோப்பை (2010):

இந்த தொடரில் இந்திய அணி,பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒரு பந்து மீதமிருக்கையில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை (2012):

இந்த தொடரில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 329 ரன்கள் இலக்கை துரத்திய ஆட்டத்தில்,இந்திய வீரர் விராட் கோஹ்லி 183 ரன்களை எடுத்து இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

ஆசிய கோப்பை (2014):

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெறச்செய்தார்.

ஆசிய கோப்பை (2016):

டி20 தொடராக நடத்தப்பட்ட இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

ஆசிய கோப்பை 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியா பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.

Story first published: Wednesday, September 19, 2018, 11:32 [IST]
Other articles published on Sep 19, 2018
English summary
india vs pakistan in Asia cup matches so far
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X