For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘யார்ரா நீ.. எங்கிருந்துடா புடிச்சாங்க உன்ன’.. அஸ்வின் யாரை இப்படி சொல்றாரு? - ஸ்டம்ப் ‘மைக்’ ஆடியோ

ஜோகஸ்ன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பேசிய நகைச்சுவை விஷயம் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி பரவி வருகிறது.

Recommended Video

Ashwin Stunned With Shardul Thakur’s 5 Wicket Haul In Johannesburg | OneIndia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

“3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ! “3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

இதில் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கே ஆட்டமிழந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 229 ரன்களுக்கு சுருட்டியது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

2வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் தென்னப்பிரிக்க அணி பெரும் ஸ்கோரை அடிக்கும் அளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது. கேப்டன் டின் எல்கர் - கீகன் பீட்டர்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வந்தது. குறிப்பாக சீனியர் பவுலர்களான முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்ட போதும் விக்கெட் விழவில்லை.

ஷர்துலின் ஸ்கெட்ச்

ஷர்துலின் ஸ்கெட்ச்

அப்போது தான் இந்திய அணிக்கு கைக்கொடுத்து காப்பாற்றினார் ஷர்துல் தாக்கூர். வந்த வேகத்தில் செட்டிலான பேட்ஸ்மேன்களை டீன் எல்கரை 28 ரன்களுக்கும், மறுமுணையில் இருந்த கீகன் பீட்டர்சனை 62 ரன்களுக்கும் வெளியேற்றி அசத்தினார். இதன் பின்னர் ஷர்துலின் ஆதிக்கம் தான் ஆட்டம் முழுவதும் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 2வது இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

பரவும் வீடியோ

பரவும் வீடியோ

இதனை பார்த்து வியந்துப்போய் அஸ்வின் கூறிய வார்த்தைகள் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஷர்துல் 5வது விக்கெட்டை கைப்பற்றிய போது, அவரின் முதல் 5 விக்கெட் ஹவுலுகாக சக வீரர்கள் ஒன்றிணைந்து பாராட்டினர். அப்போது அங்கு வந்த அஸ்வின், யார்ரா நீ, எங்கிருந்துடா புடிச்சாங்க உன்ன? நீ பால் போட்டாலே விக்கெட் விழுவுது" என நகைச்சுவையாக கூறினார்.

அஸ்வின் குணம்

அஸ்வின் கூறிய இந்த வார்த்தைகள் அருகே இருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவானதால், ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். தவறென்று பட்டால், களத்தில் பளிச்சென கூறிவிடும் ரவிச்சந்திரன் அஸ்வின் இளம் வீரர்களை தட்டிக்கொடுத்து பாராட்டுவதிலும் குறை வைக்க மாட்டார். சமீபத்தில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேலுக்காக குரல் கொடுத்தார். தற்போது ஷர்துலை பாராட்டினார்.

Story first published: Wednesday, January 5, 2022, 12:34 [IST]
Other articles published on Jan 5, 2022
English summary
Ravichandran ashwin's Hilarious Take On Shardul thakur's 5 wicket haul caught on Stump Mic in India vs South Africa 2nd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X