For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிறிஸ் வோக்ஸ் 120*, பேர்ஸ்டோ 93 எடுத்து அசத்தல்.. இந்திய பெளலர்கள் தடுமாற்றம்

By Aravinthan R

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 357 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்து ஆடி வருகிறது.

அந்த அணியின் கிறிஸ் வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் கர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இந்திய அணியை விட 250 ரன்கள் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, மேலும் ரன் குவிக்கும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம்.

இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்ததோடு முடிவுக்கு வந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய இருந்தது. இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பண்டியா என மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும், குல்தீப் மற்றும் அஸ்வின் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களும் கொண்டு களம் இறங்கியது.

அருமையாக துவங்கிய இந்தியா

அருமையாக துவங்கிய இந்தியா

துவக்கத்திலேயே, இந்திய அணியின் இஷாந்த் சர்மா மற்றும் ஷமி விக்கெட்களை எடுக்கத் துவங்கினர். ஷமி பந்துவீச்சில் ஜென்னிங்க்ஸ் மற்றும் ஜோ ரூட் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.

போப் விக்கெட்

போப் விக்கெட்

பாண்டியா போப் விக்கெட்டையும், இஷாந்த் அலஸ்டர் குக் விக்கெட்டையும் வீழ்த்த இங்கிலாந்து அணி 89-4 என தடுமாறியது. அடுத்து ஜோஸ் பட்லர் 24 ரன்களுக்கு ஷமி பந்தில் வெளியேற, 131-5 என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து.

ரன் குவித்த வெற்றிக்கூட்டணி

ரன் குவித்த வெற்றிக்கூட்டணி

இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோ மற்றும் வோக்ஸ், இந்திய பந்துவீச்சை சிதற விட்டனர். அதிரடியாக ஆடிய இந்த கூட்டணி ரன் குவிப்பில் ஈடுபட, செய்வதறியாது தவித்தார், கேப்டன் விராட் கோஹ்லி. 93 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். இந்த ஜோடி, 189 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு எதிராக ஆறாவது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த சாதனையை புரிந்தது.

தோல்வியை தவிர்க்குமா இந்தியா

தோல்வியை தவிர்க்குமா இந்தியா

அடுத்து சாம் கர்ரன் உடன் ஜோடி சேர்ந்த வோக்ஸ் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து சாதனை புரிந்தார். 250 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து மேலும் 50 ரன்கள் சேர்த்தால் கூட, இந்திய அணியின் தோல்வி உறுதி என கருதப்படுகிறது. கையை மீறி சென்று விட்ட இந்த போட்டியை தக்க வைக்க இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும் என தெரிகிறது.

Story first published: Sunday, August 12, 2018, 13:50 [IST]
Other articles published on Aug 12, 2018
English summary
Indian bolwers are struggling to beat England batsmen as Woakes scores a ton and Bairstow a 93.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X