தொடரும் சாதனை பட்டியல்... சாதனை நாயகனின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல்

IND vs SL 2nd T20 | Indian captain Virat Kohli's new achievement in T20I

இந்தூர் : சாதனை நாயகனாக திகழும் கேப்டன் விராட் கோலியின் சாதனைப்பட்டியல்கள் கடந்த ஆண்டில் தொடர்ந்த நிலையில் இந்த ஆண்டும் தான் விளையாடிய ஆண்டின் முதல் போட்டியிலேயே தன்னுடைய சாதனை பயணத்தை அவர் துவக்கி வைத்துள்ளார்.

இந்தூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் 30 ரன்களை அடித்த கோலி, கேப்டனாக டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் சர்வதேச டி20யில் 1006 ரன்களை அடித்த நிலையில், 2663 ரன்களுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தூரில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கையின் 142 என்ற இலக்கை இந்தியா எளிதாக கடந்தது.

32 பந்துகளுக்கு 45 ரன்களை குவித்த ராகுல்

32 பந்துகளுக்கு 45 ரன்களை குவித்த ராகுல்

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் மற்றும் ஷிகர் தவான் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்களை குவித்தனர். 32 பந்துகளுக்கு 45 ரன்களை கே.எல் ராகுல் குவிக்க, ஷிகர் தவான் 29 பந்துகளுக்கு 32 ரன்களை அள்ளினார்.

அபார ஆட்டத்தால் திணறிய இலங்கை

அபார ஆட்டத்தால் திணறிய இலங்கை

அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயரும் கோலியும் இணைந்து போட்டியை முடித்து வைத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 26 பந்துகளில் 36 ரன்களை விளாச, கோலி 17 பந்துகளில் 30 ரன்களை அடித்து வெற்றியுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

கோலியின் சாதனை பட்டியல்

கோலியின் சாதனை பட்டியல்

கடந்த 2019ல் உலக அளவில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய கோலி, அந்த சாதனை பயணத்தை இந்த ஆண்டிலும் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே துவக்கி வைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் சாதனை

டி20 போட்டிகளில் சாதனை

இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் விளையாடி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை கோலி பெற்றுள்ளார். இந்த சாதனையை முன்னாள் கேப்டன் தோனி 57 போட்டிகளிலும் நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 36 இன்னிங்சிலும் பெற்றுள்ளனர்.

முறியடித்த விராட் கோலி

முறியடித்த விராட் கோலி

சர்வதேச டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளெசிசின் 31 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையை தற்போது 30 இன்னிங்சில் கடந்து விராட் கோலி முறியடித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Indian captain Virat Kohli's new achievement in T20I
Story first published: Wednesday, January 8, 2020, 14:39 [IST]
Other articles published on Jan 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X