For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய இந்திய டி20 கேப்டனுக்கு காத்திருக்கும் சவால் - அடுத்து ஒரு வருடத்திற்கான சீரிஸ் ரெடி

மும்பை: டி20 உலகக் கோப்பை முடிந்தபின் இந்திய அணி பங்கேற்க உள்ள போட்டித் தொடர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

indian cricket team full schedule for next one year

அடுத்த மாதம் அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை நடைபெற்று முடிந்த பிறகு, இந்திய அணி விளையாடும் மற்ற தொடர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Recommended Video

T20 World Cup-க்கு முன்னால BCCI போட்ட திட்டம்.. தயாராகும் Indian Team

அதன்படி வரும் நவம்பர் முதல் 2022 ஜூன் வரை 14 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

சிஎஸ்கேவுக்கு அடித்த ஜாக்பாட்... பாகிஸ்தானுக்கு தான் நன்றி சொல்லனும்.. வெளியான சூப்பர் அறிவிப்பு! சிஎஸ்கேவுக்கு அடித்த ஜாக்பாட்... பாகிஸ்தானுக்கு தான் நன்றி சொல்லனும்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், "டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு நியூஸிலாந்து அணி நவம்பர் இறுதி டிசம்பரில் இந்தியாவுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன்பின் 2022 பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது. 2022 பிப்ரவரி முதல் மார்ச் வரை இலங்கை அணி இந்தியா வந்து விளையாடுகிறது. இதன் பிறகு, 2022 ஜூன் மாதம் இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்கிறது.

நியூஸிலாந்து அணி இந்தியப் பயணத்தை முடித்துச் சென்றபின், இந்திய அணி தென்னாப்பிரிக்கா புறப்படுகிறது. அந்நாட்டு அணியுடன் டெஸ்ட், டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. 2022-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் முதல் ஜூனில் நடக்கிறது. நவம்பர்-டிசம்பரில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது, மே.இ.தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

2022 பிப்ரவரி மாதம் இந்தியா வரும் இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் மாதம் இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி, 10 நாட்களில் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடக்க இருப்பதால், இந்திய அணி அதிக டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு ஏற்ப தொடர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன .

இதில் நியூஸிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கான்பூரிலும், மும்பையிலும் நடைபெற உள்ளன. இலங்கை அணியுடன் பெங்களூரு, மொஹாலியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், சுழற்சி முறையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 17 ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக ஜெய்ப்பூர், ராஞ்சி, லக்னோ, விசாகப்பட்டினம், கொல்கத்தா, அகமதாபாத், கட்டாக், திருவனந்தபுரம், சென்னை, ராஜ்கோட், டெல்லி ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரோடு, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகவிருக்கிறார். இதனால், அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி புதிய கேப்டனோடு களமிறங்கவிருக்கிறது. அது ரோஹித்தாகவும் இருக்கலாம். லோகேஷ் ராகுலாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் அதற்கேற்ப யுக்தியும், வியூகமும் வகுத்தால் சரி!.

Story first published: Tuesday, September 21, 2021, 21:30 [IST]
Other articles published on Sep 21, 2021
English summary
indian cricket full schedule for next one year - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X