எந்த டீமும் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை.. சைலன்ட்டாக ஷாக் கொடுத்த இந்திய வீரர்கள்!

Indian players failed to grab top 5 spot in 2019 test

மும்பை : எந்த டெஸ்ட் அணியும் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது இந்திய அணி. அதே சமயம், 2019ஆம் ஆண்டில் அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை.

பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - ஏமாற்றத்தை அளித்த கோனேரு ஹம்பி

ஆச்சரியம்

ஆச்சரியம்

எந்த குறிப்பிட்ட இந்திய வீரரும் 2019ஆம் ஆண்டில், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெறவில்லை. இது எப்படி சாத்தியம்? என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

தோல்வி அடையவில்லை

தோல்வி அடையவில்லை

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதல் இடத்தில் நீடித்து வருகிறது. 2019ஆம் ஆண்டில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.

சிறந்த வீரர்கள்

சிறந்த வீரர்கள்

ஒரு அணி சிறப்பாக ஆடி வந்தால், அந்த அணியை ஒரீரு வீரர்கள் முன்னின்று வழி நடத்துவார்கள். அவர்கள் அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இடம் பெறுவர்.

கோலியை நம்பிய அணி

கோலியை நம்பிய அணி

இந்திய அணி கடந்த 2018இல் அப்படித்தான் இருந்தது. அந்த ஆண்டும் இந்தியா அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. அந்த ஆண்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை நம்பியே பயணித்து வந்தது.

இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டம்

இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டம்

ஆனால், 2019இல் எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது. விராட் கோலி நன்றாக ஆடினாலும், அவரை விட இரு இந்திய வீரர்கள் அதிக ரன்கள் குவித்துள்ளனர். பந்துவீச்சில் ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மூவரும் சிறப்பாக செயல்பட்டனர். பல வீரர்களும் அணிக்காக தங்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர்.

ஆறாம் இடம் மட்டுமே

ஆறாம் இடம் மட்டுமே

ஆனால், ஒருவர் கூட 2019ஆம் ஆண்டு அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. மயங்க் அகர்வால் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஆறாம் இடம் பிடித்துள்ளார். ஷமி அதிக விக்கெட்கள் பட்டியலில் ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

பேட்டிங் பட்டியல்

பேட்டிங் பட்டியல்

2019ஆம் ஆண்டில் பேட்டிங்கில் மயங்க் அகர்வால் 11 இன்னிங்க்ஸில் 754 ரன்கள் குவித்து இந்திய வீரர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்கிறார். அவருக்கு அடுத்து ரஹானே உலக அளவில் 11ஆம் இடம் பெற்று இருக்கிறார். கோலிக்கு 13ஆம் இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

பந்துவீச்சு பட்டியல்

பந்துவீச்சு பட்டியல்

2019ஆம் ஆண்டில் பந்துவீச்சில் ஷமி 33 விக்கெட்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளார். இஷாந்த் சர்மா 25, உமேஷ் யாதவ் 23 விக்கெட்களுடன் 12 மற்றும் 13ஆம் இடத்தில் உள்ளனர்.

குறைந்த போட்டிகள்

குறைந்த போட்டிகள்

இந்திய வீரர்கள் முதல் ஐந்து இடங்களை பிடிக்காமல் போக இந்தியா குறைந்த டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியது ஒரு காரணம். அதே நேரம், இந்திய வீரர்கள் டெஸ்டில் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக ஆடியதும் ஒரு காரணம்.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

அதே சமயம், சில வெளிநாட்டு வீரர்கள் குறைந்த இன்னிங்க்ஸ்களில் அதிக ரன்கள், விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர். ஆனால், இந்திய வீரர்கள், அந்த அளவு செயல்படவில்லை என்பதும் உண்மை.

நெய்ல் வாக்னர் மிரட்டல்

நெய்ல் வாக்னர் மிரட்டல்

நியூசிலாந்தின் நெய்ல் வாக்னர் 11 இன்னிங்க்ஸில் 43 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். மறுபுறம், 16 இன்னிங்க்ஸில் ஷமி 33 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Indian players failed to grab top 5 spot in test in 2019. But, still India is no.1 in test ranking.
Story first published: Wednesday, January 1, 2020, 16:18 [IST]
Other articles published on Jan 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X