லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனாலும், முதல் நாள் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், இந்திய வீரர்களுக்கான லஞ்ச் மெனுதான்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால், நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. மழை நிற்கும் என காத்திருந்து, உணவு இடைவேளை முன்னதாகவே விடப்பட்டது.
இந்திய வீரர்களுக்கு மதிய உணவில் பரிமாறப்பட்டவை குறித்த மெனுவை, பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
[இரண்டாவது டெஸ்ட் போட்டி.. மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு... இன்று ஆட்டம் நடக்குமா]
சப்பு கொட்ட வைக்கும் அந்த மெனுவில், முயல் கறி, சிக்கன் லசாக்னே, சிக்கன் டிக்கா போன்ற அசைவ உணவுகளுடன், பன்னீர் டிக்கா கரி, தால், காய்கறிகள் ஆகியவையும் வழங்கப்பட்டன.
இதைத் தவிர டார்க் சாக்லேட், செர்ரி சீஸ் கேக், பழ சாலெட், ஐஸ்கிரீம் ஆகியவையும் பரிமாறப்பட்டன.