இந்திய அணியின் ரட்சகனுக்கு இன்று 'ஹாப்பி பர்த் டே'! #HappyBirthdayVirat

Posted By:

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், ஆக்ரோஷ ஆட்டக்காரர் கோஹ்லிக்கு இன்று 29 வது பிறந்தநாள். நேற்றைய டி-20 போட்டியை முடித்துவிட்டு ராஜ்கோட்டிலேயே அவர் தன்னுடைய பிறந்த நாளை சக வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

டெல்லியின் மருத்துவமனை ஒன்றில் 29 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் கோஹ்லி பிறந்தார். அந்த நாளில் யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் அவர் இந்திய அணியில் நிகழ்த்தப்போகும் சாதனைகள் பற்றி. அவர் கிரிக்கெட் உலகின் புதிய ரட்சகனாக மாறப்போவது பற்றி. கிரிக்கெட் உலகமே அவரை இந்தளவுக்கு நேசிக்கும் என்பதைப் பற்றி. கிரிக்கெட் உலகில் அவர் அறிமுகமான அடுத்த நாளில் இருந்து நிகழ்ந்தவை எல்லாமே அதிசயங்கள்.

கொழுகொழு குட்டி, சுட்டி இளைஞரான அணிக்குள் வந்து இப்போது ரட்சகனாக மாறியிருக்கும் விராட் கோஹ்லியின் பயணம் இன்னொரு நபரால் முறியடிக்கப்பட முடியாதது. உலகமே இவரை அடுத்த சச்சின் என்னும் போது தான்தான் நிகழ்கால கோஹ்லி என் கெத்து காட்டிக் கொண்டு இருக்கிறார்.

 கோவக்கார இளைஞன் கோஹ்லி

கோவக்கார இளைஞன் கோஹ்லி

கோஹ்லி என்றால் கோபம். கோஹ்லியை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இப்படித்தான் கூற வேண்டும். இப்போது அல்ல 2008ல் மலேசியாவில் நடந்த அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி சமயத்திலேயே அவர் கோபக்காரர் தான். அந்த கோபம் தான் தென்னாப்பிரிக்க அணியை இறுதிப்போட்டியில் தோற்கடித்து ஓடவிட்டு அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வாங்கித் தந்தது. அந்தக் கோபம் தான் இந்தியா முழுக்க அவருக்கு கெட்ட பெயரை வாங்கித் தந்தது. அதே கோபம் தான் அவரை இப்போது இந்திய அணியின் கேப்டனாகவும் மாற்றி இருக்கிறது.

 சிக்குன்னு இருக்கும் சிறுத்தை குட்டி

சிக்குன்னு இருக்கும் சிறுத்தை குட்டி

இந்திய அணிக்குள் அவர் முதன்முதலாக நுழைந்த போது குழந்தையின் முக சாடையில் பால் வடிய நின்று கொண்டு இருந்தார். இவரெல்லாம் இன்னும் ஒரு மூன்று வருடம் அணியில் விளையாடுவார் என்பது போலத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். 2008 ஆகஸ்ட் 18ல் அறிமுகமான அவர் இந்த ஒன்பது வருடங்களில் செய்து இருப்பது அசாத்திய 'டிரான்ஸபர்மேஷன்'. குழந்தையாக அறிமுகமான கோஹ்லிதான் இப்போது இந்திய அணியிலேயே பெஸ்ட் பிட்னஸ் மேன்.

 டோணியின் பெஸ்ட் பிரண்ட்

டோணியின் பெஸ்ட் பிரண்ட்

கோஹ்லியை வளர்த்ததில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரே ஆள் டோணி மட்டும்தான். இந்திய அணியின் சிறந்த கேப்டனாக டோணி வலம் வந்து கொண்டிருந்த போது அவரை ஒரு தேவ தூதனாக இந்திய அணியே பாவித்த போது அசாத்தியமாக தனது கேப்டன் பதவியை கோஹ்லிக்கு வீட்டுக் கொடுத்தார். கோஹ்லி கொழுகொழு என்று இருந்த சமயத்தில் இருந்து இப்போது வரை அவர் கோஹ்லியை ''சிக்கு'' என்றுதான் அழைத்து வருகிறார். சிக்கு என்றால் சப்போட்டா என்று அர்த்தம். கோஹ்லியை அனுஸ்காவை விட அதிகம் நம்பும் ஒரே ஆள் இப்போது உலகில் டோணி மட்டுமே. ஆனால் கோஹ்லிக்கு டோணியை விட பெஸ்ட் பிரண்ட் டோணியின் மக்கள் ஷிவா தான்.

 அடுத்தமாஸ்டர் பிளாஸ்டர்

அடுத்தமாஸ்டர் பிளாஸ்டர்

மாஸ்டர் பிளாஸ்டர் எப்படி தன்னை ஒவ்வொரு போட்டியிலும் வளர்த்துக் கொண்டாரோ அப்படித்தான் இவரும் தன்னை வளர்த்துக் கொண்டார். சச்சினின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்த பலருக்கும் அவர்தான் பெஸ்டாக இருப்பார். ஆனால் சச்சின் அதிரடியாக ஆடிய போட்டிகளை காண முடியாத இந்த கால ஆட்களுக்கு கோஹ்லிதான் பெஸ்ட். அவர் எடுத்திருக்கும் 32 ஒருநாள் மற்றும் 17 டெஸ்ட் செஞ்சுரிகளையும், அதிவேக 9000 ரன்களையும் வைத்துக் கொண்டு அவரை அடுத்த சச்சின் என கூறலாம். ஆனால் கண்டிப்பாக அவர் அடுத்த சச்சின் இல்லை அவர் 'அதுக்கும் மேல'.

 நல்லதொரு காதலன்

நல்லதொரு காதலன்

கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கு சண்டை. கோஹ்லியின் மோசமான ஆட்டத்திற்கு அனுஷ்கா தான் காரணம். அனுஷ்கா மைதானத்திற்கு வந்தால் கோஹ்லி காலி. இதுதான் கோஹ்லி ஒவ்வொரு முறை மோசமாக விளையாடும் போதும் வெளியாகும் கருத்து. அனுஷ்காவுடன் மோசமான சண்டையில் இருந்த போது கோஹ்லி ரசிகர்கள் அனைவரும் அனுஷ்காவை திட்டிய போது கோஹ்லி கூறிய வார்த்தைகள் இதுதான் "என்னை மாற்றியது, என் கஷ்டங்களில் கூட இருந்தது, நான் இப்போது இப்படி இருக்க ஒரே காரணம் எல்லாமே அனுஷ்கா மட்டும் தான். என் மீது இருக்கும் அன்பில் அவரை பிளீஸ் இப்படி பேசாதீர்கள்' என்றார். நீங்களே சொல்லுங்கள் அவர் வெறும் கேப்டன் மட்டும் தானா..?

 தி கேப்டன் கோஹ்லி

தி கேப்டன் கோஹ்லி

2011 மும்பையில் நடத்த உலகக் கோப்பை பைனல், முக்கியமான கட்டத்தில் கோஹ்லி தில்சான் பந்தில் வெறும் 35 ரன் எடுத்து அவுட் ஆனார். அப்போது பெவிலியன் திரும்பும் போது அவர் கத்தியதில் தொடங்கி நியூசிலாந்து தொடரை வென்று விட்டு, முதல் டி-20 போட்டியில் நெஹ்ராவை தூக்கி நடந்தது வரை கோஹ்லி நிகழ்த்திக்காட்டிய மாயங்களை எப்படி விவரிப்பது. டோணி தான் எனக்கு எப்பவுமே கேப்டன் என பேசிய கோஹ்லியிடம் எப்படி சொல்வது இந்திய கிரிக்கெட் உலகிற்கே நீங்கதான் பாஸ் கேப்டன்...ஹாப்பி பர்த் டே கேப்டன்.

Story first published: Sunday, November 5, 2017, 10:46 [IST]
Other articles published on Nov 5, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற